கார்த்திகேசுவின் வெடிகுண்டும் ராஜேந்திரனின் அக்குள் பந்தும்!

toon-1வர வர நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரிய மாட்டுது நைனா. எப்பப் பாரு யாராவது ஏதாவது புக்கு போடுறாய்ங்க. அதை வெளியிடுறேன்னு சொல்றாங்க. வெளிய வுடுறதுன்னா என்னான்னு போய் மண்டபத்துக்கு வெளியவே நின்னு பார்த்தா புக்க மண்டபத்து வெளியவே வுடமா உள்ளுக்குள்ளயே ஆளாலுக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு கொடுத்து படிச்சிக்கிறாய்ங்க சிரிச்சிக்கிறாய்ங்க… ஒன்னுமே புரியல நைனா.

சரி அப்படி என்னாதான் நடக்குதுன்னு பார்க்க கௌரி சர்வேசன் புக்கு வெளியிடுறாறேன்னு போனேன். நல்ல அருமையான மனுசன். நல்ல கதையெல்லாம் எழுதியிருக்கிறாரு. மரியாதை நிமித்தமா எல்லாத்துக்கும் மாலையெல்லாம் போட்டாக. இந்த மாலை ஏதோ ஒரு பழங்குடியோட மரியாதை பழக்கம்னு சொல்றாய்ங்க. நான் என்னாத்தக் கண்டேன். சரி ஏதோ போடட்டும்னு பார்த்துக்குட்டு இருந்தேன். நம்ம கார்த்திகேசு பிரப்பஸ்ஸர்தான் நூலை ஆய்ஞ்சாரு.

சும்மா சொல்லப்படாது நல்லாவே ஆஞ்சாரு. அப்போ முக்கியமா ஒரு தகவல அந்த நைனா சொன்னாக. “மலேசிய எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை பட்டறையை ஒரு கும்பல் வெடிகுண்டு வைத்து தகர்த்துவுட்டது. அவர்கள் இந்த நாட்டு இலக்கியத்துக்குச் செஞ்ச பணி இவ்வளவுதான்.”

நைனா தெரியாமதான் கேக்குறேன் எடையில உடம்பு சரியில்லாம இருந்தீங்கன்னு வெளிய பேசிக்கிட்டாக… ஒடம்பு இப்ப பரவால போலன்னு நினைச்சேன். தலையில ஏதாச்சு பாதிப்பு இருக்கான்னு எதுக்கும் ஒருமுறை டாக்டர பார்த்துக்கிங்க. ஏன்னா பழசெல்லாம் மறக்குது பாருங்க. சரி அதனால என்ன சாமி ஞாபகப்படுத்ததான் என்ன மாதிரி வழிப்போக்கனுங்க இருக்கோம்ல.

நைனா… நீங்க நடத்துனது போட்டி இல்லை. போட்டி நடத்தி அதுக்கு நம்ம எழுத்தாளப் பசங்க கதைய அனுப்பி வச்சிருந்தா நீங்க சொல்றது முழுக்க ஞாயம். இந்தப் பசங்க அவங்க பாட்டுக்கு பத்திரிகையில் கதைய எழுதி ஜோலியா பார்த்துக்குட்டு இருந்தாய்ங்க. நீங்க அவங்க கதைங்களை வாசிச்சி விமர்சிக்கிறது உங்களோட முழு உரிமை. ஏன்னா கதை பொதுவுக்கு வந்துருச்சி. ஆனா, அதை தொகுத்து புக்கா போட நீங்க எழுத்துப்பூர்வமா அவய்ங்க கிட்ட அனுமதி கேட்டிருக்கனும். செஞ்சிங்களா? இல்லயே. புக்க போட்டிங்க அதை வித்திங்க. இப்ப இங்க நடந்தது வியாபாரம். வியாபாரம் செய்யப்பட்ட பொருள் கதைகள். நைனா… இது என்னா கசமாலம்? நீங்க யாரோடையோ கதைய எடுத்து புக்கா போட்டு விப்பிங்களாம். ஆனா அதை வித்ததுக்கான காசு (அது என்னமோ கருமம் ராயல்டியோ வாலாட்டியோ வாயில பூர மாட்டிங்குது) கொடுக்க மாட்டிங்களாம். என்ன நைனா தமாசு இது?

காரணம் கேட்டா ராயல்டி கொஞ்சம் காசுன்னு உதார் விடுறீங்க. நைனா! சின்ன காசோ பெரிய காசோ அது ஒருத்தனோட உழைப்பு. உழைப்ப சுரண்டி வித்ததுக்கு பேரு திருட்டு. அடுத்தவன் நிலத்துல விளைஞ்சத சப்புக்கொட்டி நீங்க புடுங்கி வித்து, விதைச்சவன் பங்கு கேட்டா வெடிகுண்டு வச்சிட்டாய்ங்கன்னு வாய் கூசாம சொல்றீங்களே இது ஞாயமா? நம்ம தலைவருக்குதான் இந்த சமாச்சாரமெல்லாம் புரியாது. படிச்ச மனுசன் கொஞ்சம் எடுத்து சொல்லாம வயசான காலத்துல எதுக்கு சாமி வெளக்கமாத்து குச்சிய எடுத்துவச்சிக்கிட்டு கத்தி சுத்துறீரு. ஒம்ம கண்ணுலேயே குத்திக்கப்போது நைனா. போங்க நைனா… போங்க… ஆவுற வேலய பாருங்க. யாரு யாரு எலக்கியத்துக்கு என்னா செஞ்சாங்கன்னு காலம் சொல்லும் …  காலங்கெட்ட காலத்துல இந்தப் பெரச்சனையெல்லாம் பேசாதிங்க. அப்புறம் மொத்தமா இது வரைக்குமான கணக்கு வழக்கு, ராயல்டி என அவைய்ங்க திரும்ப ஆரம்பிச்சி தொலைச்சிட்டாய்ங்கன்னா சங்கத்துக்குதான் ஆப்பு.

முதல்ல சங்கம் அச்சடிக்கும் புத்தகங்கள டென்டர் முறையில நீங்க அச்சடிக்கிறீங்களா? நீங்க பேசுன பேச்சுக்கு அடுத்து அதுக்காகதான்  வைக்கனும் போல சதக். நீங்களா ஒரு அச்சகத்துல அச்சுக்குக் கொடுத்து கணக்குக் காட்டுவீங்களாம், சாதாரண புக்குக்கு ஐந்தாயிரம் பத்தாயிரம்னு பட்டியல் போடுவீங்களாம்… என்ன நைனா இது? ஒரு சங்கம் நூலை அச்சடிக்கும் முன்பு அதை டென்டருக்கு விட்டு மலிவாகக் கிடைக்கும் அச்சகத்தில் அச்சடிக்கனுமாமே? எதுக்கும் கொஞ்சம் ஆராஞ்சி வைங்க. பய புள்ளைங்க கேட்டுட போறாய்ங்க…

***

தல… என்னா தல நம்மல கண்டுக்கவே மாட்டுறாய்ங்க பச்சா பசங்கன்னு நினைக்கிறீங்க. அதென்னா தல அது. எழுத்தாளர் சங்கம் நூல வெளியிட்டா ஒரே நிகழ்வோட முடிச்சிக்கிறீங்க. நீங்க போட்டா சாமிவேலுவே கூப்புடுறீங்க, சுப்பிரமணியத்த கூப்புடுறீய்ங்க… அட நாடு முழுக்க வெளியீடெல்லாம் வக்கிறீய்ங்க. ஏன் தல, என்னமோ எழுத்தாளர் சங்கத்துக்கு உயிர் கொடுக்க வாழ்ற மாதிரி பாவ்லா காட்டிட்டு உம்ம புக்குன்னா பிச்சி அடிச்சிக்கிட்டு வசூல் செய்றீங்க… சங்க புக்குனா கம்முன்னு முடிச்சிகிறீய்ங்க. சுருக்கமா சொன்னா, சங்கத்தால பெற்ற தொடர்புகளையெல்லாம் உங்க தனி மனுஷ தேவைக்காக பாவிச்சி பணம் சம்பாதிக்கிறீங்க. இதையே சங்கத்துக்குச் செஞ்சா காசு கொஞ்சம் சங்கத்துல இருக்கும் பாருங்க. நீங்களும் அரசாங்கத்த அடிக்கடி டிஸ்தர்ப் செய்ய வேணாம். பலே கில்லாடி தல நீங்க.

சரி விசயத்துக்கு வருவோம். இடையில கப்பளா பத்தாஸ் பக்கம் வைரமுத்து வந்ததா பேசிக்கிட்டாய்ங்க. நானும் என்னவோ ஏதோன்னு பாத்தா அட தல நீங்களே வெள்ளையும் சொள்ளையும் வந்து நிக்கிறீய்ங்க. சரி என்னமோ பேச போறிங்கன்னு பார்த்தா நம்ம ஜமுனா சிஸ்டர் புக்குக்கு விமர்சனம் பண்றதா அப்புறம்தான் தெரிஞ்சது.

சரி தல, கடசி வரைக்கும் நீங்க புக்கப் பத்தி பேசல. ஆனா ஏன் தல மேடையில எக்ஸைசஸ் செஞ்சி காமடி பீஸா ஆயிட்டிங்க. வலது அக்குள்ள ஒரு நெகிழி பந்தையும் எடது அக்குள்ள ஒரு நிகிழி பந்தையும் வச்சிக்கிட்டு கையில கண்ணாடி பந்த புடிச்சிக்கிட்டுன்னு நீங்க சொல்ல சொல்ல நா கற்பனை செஞ்சி கொழம்பியே போயிட்டேன் போங்க. சரியான குசும்பு தல நீங்க. சோத்தாங்கை அக்குள்ள இருக்கிறது பொருளாதாரமாம், பீச்சாங்கை அக்குள்ள இருக்கிறது கல்வியாம். கையில இருக்கிறது வாழ்க்கையாம். அட சூப்பர் தல. நம்ம சூப்பர் ஸ்டார் பார்த்தாரு அடுத்தப் படத்துல இந்த சீன கண்டிப்பா வச்சி கலாச்சிடுவாரு கலாய்ச்சி.

சரி தல, அந்த மேடையில ஏதோ இலக்கியத்துல கழிவறை இலக்கியம் இருக்கு, அப்புறம் இலக்கியம்னா அதை குடும்பத்தோட உக்காந்து படிக்கனும் அது இதுன்னு ஜமாய்ச்சிங்கலாமே. சரி தல, அதென்னா அது… கழிவறை இலக்கியம்? அப்படி ஒன்னு இருக்கா? எதை சொல்றீங்க தல? ஜமுனா அக்கா எழுதுனதையா? கொஞ்சம் தெளிவா சொன்னா  என்னா ஏதுன்னு புரிஞ்சிக்குவேன்ல…

அப்புறம் அடிக்கடி இந்தக் ‘குடும்பத்தோட படிக்கிறது… குடும்பத்தோட படிகிறதுன்னு சொல்றீங்களே’ அது என்னா தல உங்க குடும்பத்தோடயா? இல்ல எங்க குடும்பத்தோடயா? சரி தல… நீங்க மக்கள் ஓசையில ஞாயிறு தோறும் ஏதேதோ போடுறீங்களே. அதை உங்க குடும்பத்தோட உக்காந்துதான் படிப்பீங்களா? நடிகைகளோட பாதி மார்பு, இடை, தொடைன்னு போட்டு அசத்துறீங்களே அதை குடும்பத்தோட உக்கார்ந்து பார்க்க மாட்டாய்ங்களா? என்னா தலை காமடி பண்றீரு.

படமா இருந்தா தப்பில்ல.. எழுத்தா இருந்தா தப்பா? ஐம்பதாயிரம் பேர் படிக்கிற தினசரியில ஆபாசத்த நீங்க போடுவீங்க… ஆயிரம் மட்டுமே அச்சடிக்கிற சிறுகதை தொகுதியில வாழ்வை பேசுனா தப்பா? தமிழ் மட்டுமே தெரிஞ்சவங்க அதுவும் இலக்கிய அறிவுள்ளவர்கள் மட்டுமே படிக்கிற ஒரு இதழ்ல காமம் இருந்தா தப்பு, தமிழ் தெரியலனா கூட நீங்க போடுற ஆபாசப் படத்தை ரசிக்க முடியுற சூழல் தப்பில்ல…

போ தல. போயி உம்ம புள்ள குட்டிங்களயாவது நல்லா படிக்க வைங்க. சும்மா அக்குள்ள பந்த வச்சி தமாஸ் பண்ணிக்கிட்டு.

5 கருத்துகள் for “கார்த்திகேசுவின் வெடிகுண்டும் ராஜேந்திரனின் அக்குள் பந்தும்!

 1. விஜயா
  July 10, 2014 at 12:52 pm

  லும்பா, ராயல்டி தொடர்பா சில மாதங்கலுக்கு முன்பு முன்னெடுக்கப்பட்ட எதிர்வினை ரொம்ப சிறிய அளவிலானது. இது உண்மையிலேயே மிகப் பெரிய குற்றம். படைப்பாளர்களின் அனுமதி வாங்காதது, தகுதியான ராயல்டியை தராதது எத்தனை மோசமான உழைப்புச் சுரண்டல். மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு பிரதிநிதியான ஒரு சங்கம் இவ்வளவு அலட்சியமா நடந்துகிட்டது மட்டுமில்லாம இப்போதுவரை மற்றவங்களை குறைகூறிகிட்டு இருப்பதை கேட்கவே கோபமா வருது. இவங்களுக்கு இதெல்லாம் பத்தாது. இன்னும் அழுத்தமா எதையாவது செய்தாலாவது யோசிப்பாங்களானு பார்ப்போம்.

  அடுத்தது, கழிவரை இலக்கியம்னு பேசுகிறவங்க முதலில் மொழி, இலக்கியம் தொடர்பான தங்களுடைய எல்லாவித செயல்பாட்டிலும் தெளிவா இயங்குறாங்களா? நூல் விமர்சனத்துக்கு போனால் நூலைப் பற்றி விமர்சனம் செய்யாம சொந்த கதை சோகக்கதை பேசறது, புத்தகத்தையே படிக்காம புகழ்ந்து தள்ளறது மட்டும்தான் பல நூல் வெளியீட்டுல நடக்குது. மொண்ணியா ஒன்றை எழுதி இவங்ககிட்ட ‘நல்ல’ இலக்கியம்னு பாராட்டு வாங்றதவிட மானுடத்த பேசி ‘கழவறை இலக்கியம்’னு கெட்ட பேரு வாங்கலாம்பா.

  லும்பா… நாளும் தெரிஞ்சவங்களே வாய்திறக்காம மாங்கு மாங்கு தலையாட்டிகிட்டு இருக்கிற நேரத்துல நீ இப்படி திடீர்னு வந்து எல்லாத்தையும் புட்டுபுட்டு வைக்கிறது மனசுக்கு எவ்வளோபெரிய ஆறுதல் தெரியுமா….

 2. m.karunakaran
  July 11, 2014 at 4:44 pm

  Luppanai naan arivaan. Ippadi eluti unggal nerathai vinaagga veendam. Inte neerattil oru nalla ilakkiyam padaikka paarungkal. Itu vellam veendaata visianggal. Nammudaya padaipadral vinaagi poogom.

 3. அபி
  July 13, 2014 at 1:33 am

  M. Karunakaran, நீங்கள் சொல்வதுபோல் இது வேண்டாத விசயம் அல்ல. படைப்பாளி தன்னை சுற்றி நடக்கும் எதை பற்றியுமே அக்கறை இல்லாமல் இருந்துவிட முடியாது. லும்பன் இதை எழுத ஒருமணி நேரம்கூட செலவிட்டுருக்க மாட்டான். அவனுக்கு இதில் சிரமமும் இருந்திருக்காது. இதை சொல்வதற்குஇப்பொது தேவை இருக்குகிறதுகிறது. சொல்லவந்த செய்தி முக்கியமானது. தங்களது இயலாமையை மறைக்க கழிவறை இலக்கியம், வெடிகுண்டு என்று வறட்டுவாதம் செய்பவர்களுக்கு லும்பன் என்பவன் நிச்சயம் அவ்வப்போது தேவையே.

 4. ஸ்ரீவிஜி
  July 15, 2014 at 2:57 pm

  ஹாலோ யாருப்பா இது.. லும்பன்.. தமிழ்நாடா? இப்படி கிச்சுக்கிச்சு மூட்டறீங்க.. ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

 5. சுமார் மூஞ்சி குமாரு
  July 15, 2014 at 3:02 pm

  @கருணாகரன்.. இப்படியெல்லாம் பேசாதா, நல்ல நொல்ல எலக்கியம் படைச்சவங்க நெரிய பேர் இருக்காங்கே மலேசியால.. இங்கே வந்துகின்னு அறிவுர சொல்றத வுட்டுப்புட்டு, அந்த எலக்கியங்கல படிங்க சாமீயோ.. லும்பனின் எழுத்து பாணி கவர்ந்துச்சு என்னிய .. வூடு கட்டி மாஞ்சா சோறு எடு மாப்ளே..

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...