பறத்தலின் நிமித்தம்

பறக்க எத்தனிக்கும் பறவை 444ac702490f3865ad3984c072c036a0
ஒன்றினை வரைகிறாள் மாயா.
நீல நிற பறவை அது.
கண்களில் கானகத்தைச் சுமந்தபடி
சிறகுகளை விரித்துக் காத்திருக்கிறது.
தானியங்களையும் தடாகம் ஒன்றினையும்
மரங்களையும் வரைந்து முடித்த அவள்
களைத்துப் போய் உறங்கி விட்டாள்.
தான் பறந்து திரிய
ஒரேயொரு வானத்தை வரைந்து விடு என
காதருகில் வந்து கெஞ்சி எழுப்புகிறது
அந்நீல நிற பறவை.
மாயாவின் கனவுகளில்
உள்நுழைந்து கூச்சலிடும் அப்பறவையை
முத்தமிட்டுச் சொல்கிறாள்
உனது வானம் வரைய
ஒரு சொட்டு நீலம் தேவை என.
கானகமெங்கும் அலைந்து திரிகிறது அப்பறவை

1 கருத்து for “பறத்தலின் நிமித்தம்

  1. சிவனேஸ்
    April 12, 2017 at 3:16 pm

    அருமை

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...