படைப்புகளுக்குப் பரிசுத் திட்டம் 2017 – நாள் நீட்டிப்பு

trans_genesis2வல்லினம் கடந்த ஆண்டு வெற்றிகரமாக சிறுகதைப் போட்டியை நடத்தி முடித்ததைத் தொடர்ந்து இவ்வருடமும் படைப்புகளுக்கான பரிசுத்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

இத்திட்டத்தின் வழி சிறுகதை, கட்டுரை, பத்தி ஆகிய மூன்று இலக்கிய வடிவங்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு படைப்புக்கு மட்டும் RM 1000.00 ( ஆயிரம்  ரிங்கிட்) பரிசு வழங்க வல்லினம் முடிவெடுத்துள்ளது.

சிறந்த சிறுகதை – RM1000.00

சிறந்த கட்டுரை- RM1000.00

சிறந்த பத்தி- RM1000.00

போட்டியின் விதிமுறைகள்:

1.இப்போட்டில் மலேசிய மற்றும் சிங்கைப் படைப்பாளிகள் (Citizen/PR உள்ளவர்கள்) மட்டுமே பங்கெடுக்க இயலும்.

2. வயது வரம்பு இல்லை.

3. கதை, கட்டுரை, பத்தி – வார்த்தை கட்டுப்பாடுகள் இல்லை.

4. கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம்.  திட்டவட்டமான கருப்பொருள், நாட்டின் சூழல் என இல்லை. சுதந்திரமாக எழுதலாம்.

2. ஓர் எழுத்தாளர் ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புகளை அனுப்பலாம்.

3. ஓர் எழுத்தாளர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் படைப்புகளை அனுப்பலாம்.

4. படைப்புகளை 30.4.2017க்குள் அனுப்ப வேண்டும்.

5. கையெழுத்துப்பிரதிகள் ஏற்கப்படமாட்டாது. அனைத்து படைப்புகளும் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு மின்னஞ்சல்   மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

6. படைப்புகளுக்கு பக்க வரையறை இல்லை.

7. இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் மே 2017 முதல் ஆகஸ்ட் 2017 வரை வல்லினம் இணைய இதழில் தொடர்ந்து இடம்பெறும். இறுதிச்சுற்றுக்கு தேர்வு பெற்ற படைப்புகளில், ஒரு வகைமையில் ஒரு படைப்பு மட்டுமே பரிசுக்குத் தகுதிபெறும்.

8. வெற்றிபெற்ற படைப்புகளுக்கான பரிசுகள் 2017 வல்லினம் கலை இலக்கிய விழாவில் வழங்கப்படும்.

9. படைப்புகள் வல்லினம் போட்டிக்கென்று எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். படைப்புகள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்வரை அப்படைப்புகளை வேறெங்கும் பிரசுரம் செய்யக்கூடாது.

10. வல்லினம் குழுவினர் இப்போட்டியில் பங்கெடுக்க இயலாது.

11. vallinam2017@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனைத்து படைப்புகளையும் அனுப்பலாம்.

12. அனைத்து தொடர்புகளுக்கும் : ம.நவீன் 0163194522, அ.பாண்டியன் : 0136696944, கங்காதுரை: 0124405112 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

3 comments for “படைப்புகளுக்குப் பரிசுத் திட்டம் 2017 – நாள் நீட்டிப்பு

 1. NAGESHWARY PALASUBRAMANIAM
  April 10, 2017 at 10:46 pm

  magilchi

 2. subramanian poovalingam
  April 12, 2017 at 4:30 pm

  அன்புடையீர்,
  வணக்கம். படைப்புகளுக்குப் பரிசுத் திட்டம் அறிந்து மகிழ்ந்தேன். அதில் இப்போட்டில் மலேசிய மற்றும் சிங்கைப் படைப்பாளிகள் (Citizen/PR உள்ளவர்கள்) மட்டுமே பங்கெடுக்க இயலும்.எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைவரும் பங்கு பெறுவதற்கு வாய்ப்பு அளித்தால் நல்லது என்பது என் கருத்து

  பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை
  E mail : psubramanian.family@gmail.com

 3. April 12, 2017 at 4:41 pm

  why should not be applicable to Tamil people who are away from native land like me ?in Rajasthan

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...