வல்லினம் பொறுப்பாசிரியர் அ.பாண்டியன்

அ.பாண்டியன்

அ.பாண்டியன்

வல்லினம் தொடர்ந்து புதிய சாத்தியங்களை மலேசிய இலக்கியச் சூழலில் உருவாக்க முயன்றுவருகிறது. அவ்வகையில் கடந்த சில மாதங்களாக எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான ஶ்ரீதர் ரங்கராஜ் அவர்கள் வல்லினம் இதழை வழிநடத்தினார். அவரது மேற்பார்வையில் வல்லினத்தில் மொழிப்பெயர்ப்பு இலக்கியங்களும் தமிழகத்தில் புதிய தலைமுறையினரின் படைப்புகளும் சங்க இலக்கிய அறிமுகங்களும் அதிகம் இடம்பெற்றன. இது வல்லினம் இதழுக்குப் புதிய முகத்தைக் கொடுத்தது.

இவ்வருடம் மே மாதம் முதல் டிசம்பர் வரை எழுத்தாளர் அ.பாண்டியனின் மேற்பார்வையில் வல்லினம் இயங்கும். அவர் பொறுப்பாசிரியராக இயங்கும் இந்த எட்டுமாதங்களில் வல்லினத்தில் இடம்பெறப்போகும் படைப்புகளை அவரே தேர்ந்தெடுத்துப் பிரசுரிப்பார். எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை vallinam.padaippukal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

தொடர்ந்து வல்லினம் ஆசிரியர் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவமான திறனை வல்லினத்தின் பொறுப்பாசிரியராக இருந்து செயல்படுத்துவர். நன்றி.

1 comment for “வல்லினம் பொறுப்பாசிரியர் அ.பாண்டியன்

  1. K.Lachimanan
    May 8, 2017 at 5:55 pm

    வாழ்த்துகள் பாண்டியன்
    கா.இலட்சுமணன்
    பாடாங் செராய்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...