கலை இலக்கிய விழா 9

001வல்லினத்தின் கலை இலக்கிய விழா இவ்வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘வல்லினம் 100’ எனும் 400 பக்க இதழ் வெளியீடு காண்கிறது. வல்லினம் மாத இதழாகத் தொடங்கப்பட்டு 100-வது இதழை எட்டுகிறது. எனவே கடந்த மாதங்களில் இணைய இதழில் பிரசுரமான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் ஆகியவற்றோடு புதிதாக இவ்விதழுக்கென்று எழுதப்பட்ட படைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவுக்கென தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் கோணங்கி சிறப்பு வருகை புரிகிறார். நவீன தமிழ் இலக்கியச் சூழலில் முக்கிய புனைவெழுத்தாளரான அவரது இலக்கிய உரை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். வல்லினம் பரிசுத்திட்டத்தின் கீழ் எழுதப்பட்டு இறுதிச்சுற்றுக்குத் தேர்வு பெற்ற படைப்புகளில் சிறந்த ஒன்று இந்த விழாவில் தேர்வுபெற்று பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த விழாவில் வழக்கறிஞர் பசுபதி அவர்கள் கலந்துகொண்டு ‘வல்லினம் 100’ இதழை வெளியிடுவதுடன் சிறப்புரையும் ஆற்றுவார்.

3 comments for “கலை இலக்கிய விழா 9

 1. A.p.Raman.
  June 22, 2017 at 9:32 pm

  நல்ல முயற்சி. பாராட்டுகள்- வாழ்த்துகள்!

 2. DR M S SHRI LAKSHMI
  August 6, 2017 at 6:17 am

  வல்லினம் நூறாவது இதழை எட்டுவது குறித்து மகிழ்ச்சி.வாழ்த்துக்கள். தொடர்ந்து என்னுடைய ஆதரவு உண்டு.
  நான் அந்த வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறேன்.- முனைவர் எம் எஸ் ஸ்ரீ லக்ஷ்மி ,சிங்கப்பூர்.

 3. kannikovilraja
  August 9, 2017 at 11:20 am

  ஐயா வணக்கம்.

  வெளிநாடாக இருந்தாலும் தாய்மொழி – தமிழ்மொழி மீது பற்றின் காரணமாக தாங்கள் செய்யும் சேவைக்கு தலை வணங்குகிறேன். தமிழகத்தின் தலைநகரில் இருந்து இந்த வாழ்த்து தங்களுக்கும், குழுவினருக்கும் உரித்தாக்குகிறேன்.

  நன்றி

  நேயத்துடன்
  கன்னிக்கோவில் இராஜா
  ஆசிரியர், மின்மினி ஹைக்கூ இதழ்
  சென்னை.
  9841236965

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...