கேள்விகள் எழுப்புவதே சிறப்பு

pasupathiவல்லினம் குழுவை பார்க்கும்போதெல்லாம், வெறுமனே எழுத்தாளர்களின் குழுமம் என நாம் பார்ப்பதில்லை. துடிப்பு மிக்க இளைஞர்களைக் கொண்ட சமுதாயத்தை மாற்றக்கூடிய ஆளுமை கொண்ட இளம் தலைமுறையினராகத்தான் பார்க்கின்றேன். நமது இந்திய சமுதாயத்தின் வரலாற்றைப் பார்த்தோமேயானால் கடந்த இருநூறு ஆண்டுகளில் பல போராட்டங்களுக்கு இடையே தனி அடையாளமாக தன்னைப் பார்க்க விரும்புகிறது. மரபு சார்ந்த சிந்தனை, இப்படித்தான் சமுதாயம் இருக்கவேண்டும், சிந்தனை மாற்றம் இருக்கக்கூடாது, அரசாங்கத்திற்கு ஏற்றார்போலத்தான் எதையும் பார்த்தல் வேண்டும், போன்றவைக்கு மத்தியில் மாறுபட்ட சிந்தனை தேவை என்பதை வழியுறுத்துவதில் வல்லினம் முன்னோடியாக இருக்கின்றது. இவர்கள் கண்டிப்பாக சமுதாயத்தை மேல்நிலை நோக்கி கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது. நாங்கள் இளைஞர்களாக இருந்த காலக்கட்டத்தில் எங்களுக்கு உதவி செய்ய யாருமிருக்கவில்லை. இவ்வாறு இளைஞர்கள் சமூகத்துக்கு ஏதாவது செய்ய முன்வரும்போது எந்த வகையிலாவது அவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு இருக்கிறது. ஆளுமை கொண்ட துடிப்பான இளைஞர்களுக்கு நாம் உதவி செய்துதான் ஆகவேண்டும். வல்லினத்தின் வளர்ச்சியைச் சொல்வதென்றால், இலக்கியம் என மட்டும் நின்றுவிடாமல் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அவர்கள் பங்காற்றுவதும், இலக்கிய விமர்சனங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதும் நல்ல நிலையை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

எப்போதுமே அமைதியாக, கேள்விகள் இன்றி எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்பவராக இருக்கக் கூடாது. கேள்வி எழுப்ப வேண்டும். மாற்றுக்கருத்து சொல்லவேண்டும். அதனை இவர்கள் சரியாகச்செய்துகொண்டிருக்கிறார்கள் என கண்டிப்பாக கூறுவேன். இவர்களின் தொடர் பயணத்தில் நூறாவது இதழ் வெளிவரவிருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. நான் நம்பும் சித்தாந்தம் ஒன்று இருக்கிறது. அதாவது அடிப்படை கொள்கை சரியாக இருந்தால் எதுவும் நீண்டநாள் தொடரும். வல்லினம் நூறு என்ன ஆயிரம் இதழ்வரை பயணிக்கலாம். அவர்களின் முயற்சிக்கு என் வாழ்த்துகள்.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...