என்னை மீட்ட வல்லினம்

கோ.முதிடீரென மலேசிய இலக்கியத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதாய் ‘காதல்’ என்ற இதழ் வந்திருந்தது. இளைஞர்கள் தங்களிடம் உள்ள மொத்த திறமைகளையும் கொட்டி அதனை உருவாக்கியிருந்தார்கள். புத்தகத்தில் வெளிவந்த நேர்காணலுக்கான படங்கள் அவ்வளவு அற்புதமாக இருந்தன. நான் அவற்றை மிகவும் ரசித்தேன். ‘காதல்’ புத்தகத்துக்குப் பிறகுதான் வல்லினம் வெளிவந்தது. வல்லினத்தின் வெளிப்பாடு என்னை எழுதத் தூண்டியது. வல்லினத்தில் தொடர்ந்து பல கதைகளை எழுதி அனுப்பினேன். காரணம் இலக்கியத்தின் மூலம் சில பதிவுகளை நான் செய்ய வேண்டும் என நினைத்தேன். கடந்த காலத்தில் என்னுடைய வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட நான் சந்திந்தவர்களையெல்லாம் கதாபாத்திரங்களாகப் பதிவு செய்வதற்காக என் கதைகளில் அவர்களை கொண்டுவந்தேன். என்னைப்பொருத்தவரையில் என்னை மீண்டும் எழுத வைத்ததில் பெரிய பங்கு வல்லினத்திற்கு உண்டு.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...