வல்லினத்தின் ஆவணப்படங்கள்

சஞ்சைஎட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளாக வல்லினம் குறித்து எனக்கு தெரியும். எதையும் தொடங்குவது சுலபமானது ஆனால் அதனை தொடர்ந்து செய்வது சவாலான காரியம், அதற்கான ஆற்றல் மற்றும் ஆர்வம் இருந்தாலின்றி அதனை செய்ய முடியாது. வல்லினம் பழைய எழுத்தாளர்களைத் தேடிக் கண்டறிந்து மீண்டும் எழுத வைத்து அதற்கான அங்கிகாரம் கொடுத்து வருகின்றார்கள். மிகவும் முக்கியமான செயல்பாடாக இதனை நான் பார்க்கின்றேன். நம் நாட்டில் பார்த்தோமென்றால் இந்தியர்கள் குறித்த முழுமையான ஆவணங்களோ பதிவோ இருக்கவில்லை. குறைந்தது நம் குடும்பத்தை குறித்துக்கூட நாம் எந்த பதிவையும் வைத்திருக்க மாட்டோம். இந்த அலட்சியப் போக்குதான் நாம் இழந்துவிட்ட பலவற்றுக்குக் காரணம். நாம் எங்கிருந்து வந்தோம். எங்கிருந்து ஆரம்பித்தோம் என்பது முக்கியமானது. இப்போது நமக்கு இது குறித்து அவ்வளவாக தெரியாவிட்டாலும் வரக்கூடிய காலங்களில் எல்லாமே வளர்ச்சியடைந்திருக்கும் சமயம் நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை தெரிந்திருப்பது அவசியம். அந்த வகையில் வல்லினம் செய்துக்கொண்டிருக்கும் ஆவணப்படுத்தும் செயல்பாடு மிக முக்கியமான ஒன்றாக கருதுகிறேன். இப்போது பல இளைஞர்கள் சினிமா துறைக்கு வருகின்றார்கள். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பிருந்தது போல கடினமின்றி இவர்களுக்கு இலகுவாகவே தொழில்நுட்ப வசதி கிடைக்கின்றது. ஆனால் குறைபாடாக என்ன பார்க்கின்றேன் என்றால் அடிப்படையான இலக்கிய பின்புலம் இல்லாததை சொல்லலாம். இதனால் அவர்களின் ஆக்கங்களும் பலவீனமாகவே வருகிறன. இனி வரும் அடுத்த சந்திகளைப் படிக்கின்ற தலைமுறைகளாகவும் நல்ல கதைகளை எழுதுகின்றவர்களாகவும் மாற்று சிந்தனைக் கொண்டவர்களாகவும் உருவாக்க தங்கள் பங்கை வல்லினம் தொடர்ந்து செயல்படுத்தும் என நம்புகின்றேன்.

 

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...