விஷ்ணுபுரம் விருது 2017

12017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மலேசிய எழுத்தாளரான சீ.முத்துசாமிக்கு வழங்கப்படுகிறது. கோவையில் டிசம்பர் 16,17 ஆம் தேதிகளில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவும் வாசகர்கூடலும் நிகழவிருக்கிறது.

16 ஆம்தேதி காலை ஒன்பது மணிக்குச் சந்திப்புகள் தொடங்கும். இரவு பதினொரு மணிவரை எழுத்தாளர்களுடன் உரையாடல்கள் நிகழும். 17 ஆம்தேதி காலை 9 மணிக்கு மீண்டும் தொடங்கி மாலை நான்குமணிக்கு முடிவடையும். மாலை ஆறுமணிக்கு பொது நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும்.

சீ.முத்துசாமி மலேசியாவின் மூத்தப்படைப்பாளிகளில் தனித்துவமானவர். தொடர்ந்து தோட்டத்தைக் களமாக வைத்து புனைவுகளில் இயங்கிவருபவர். இவரது ‘மண்புழுக்கள்’ பரவலான வாசகர் கவனத்தைப் பெற்ற நாவல். சீ.முத்துசாமிக்குக் கிடைக்கும் இவ்விருது மலேசிய இலக்கியத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படும் சூழலில் இவ்விழாவில் மலேசியாவில் இருந்து மா.சண்முகசிவா, சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, ம.நவீன், விஜயலட்சுமி, தயாஜி, தமிழ்மாறன், குமாரசாமி என சிலர் கலந்துகொள்கின்றனர்.

இந்த விருது விழாவுக்கென சீ.முத்துசாமியின் ஆவணப்படம் தயாராகியுள்ளது. ம.நவீன் இயக்கிய இப்படத்தை செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 50 நிமிடங்கள் தயாராகியுள்ள இந்த ஆவணப்படத்தின் சாரம் 15 நிமிடங்கள் விழாவில் ஒளிபரப்பப்படும்.

ஆ,மாதவன், தேவதேவன், பூமணி, தெளிவத்தை ஜோசப்,     ஞாIMG-20171201-WA0023னக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன் என தமிழ் நவீன இலக்கியத்தில் பல முக்கியமான ஆளுமைகள் விஷ்ணுபுரம் விருதுப்பெற்றுள்ள  சூழலில் மலேசிய எழுத்தாளர் ஒருவர் அவ்வரிசையில் வருவதும் அவரது படைப்புகள் குறித்த விமர்சன நூல் இவ்விழாவில் வெளியீடு காண்பதும் உலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் மலேசிய இலக்கியத்தின் மேல் கவனம் குவியவைக்கும் ஓர் அரிய நிகழ்வு. இவ்வேளையில்  வாய்ப்புள்ள மலேசிய எழுத்தாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என வல்லினம் கேட்டுக்கொள்கிறது.

சீ.முத்துசாமியின் சில சிறுகதைகள்

மா.சண்முகசிவா சிறுகதைகளை வாசிக்க

வல்லினத்தில் பிரசுரமான மா.சண்முகசிவாவின் பிற படைப்புகள்

ம.நவீன் படைப்புகளை வாசிக்க

விஜயலட்சுமியின் படைப்புகளை வாசிக்க

தயாஜி படைப்புகளை வாசிக்க

1 கருத்து for “விஷ்ணுபுரம் விருது 2017

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...