வல்லினத்தின் இரு நிகழ்ச்சிகள்

arivippu

சீ.முத்துசாமியின் படைப்புலகம்:  கலந்துரையாடல்

விஷ்ணுபுரம் விருது பெற்றதைத் தொடர்ந்து எழுத்தாளர் சீ.முத்துசாமியின் படைப்புலகம் குறித்த அறிமுகக் கூட்டமும் அவரது ஆவணப்பட வெளியீடும் வல்லினம் ஏற்பாட்டில் நடக்க உள்ளது.

மலேசிய நவீன இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான அவரது மண்புழுக்கள் நாவல், குறுநாவல் தொகுப்பான இருளுள் அலையும் குரல்கள் மற்றும் சிறுகதைகள் குறித்த உரைகள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். மேலும் ‘ரப்பர் விதைகளுடன் விளையாடும் கலைஞன்’ எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட அவரது ஆவணப்படத்தை சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் வெளியீடு செய்து உரையாற்றுவார்.

மா.சண்முகசிவாவின் வாழ்த்துரையுடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் அவரது நாவல்கள் குறித்து தயாஜியும், குறுநாவல்கள் குறித்து அ.பாண்டியனும் சிறுகதைகள் குறித்து ம.நவீனும் உரையாற்றுவர்.

முற்றிலும் இலவசமாக நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் மலேசிய கலை இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொள்ள வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறோம்.

சடக்கு இணையத்தளம் அறிமுகம்

வல்லினம் இலக்கியக் குழுமத்தின் மாபெரும் முயற்சியில் தயாராகியிருக்கும் ‘சடக்கு’ இணையத்தளமும் இதே நிகழ்ச்சியில் வெளியீடு காண்கிறது. இந்த நிகழ்ச்சி குறித்த விரிவான அறிமுகம் அடுத்த மாத வல்லினத்தில் இடம்பெறும். சடக்கு தளத்தில் முன்னோட்டத்தைக் காண: சடக்கு முன்னோட்டம்

நிகழ்ச்சி விபரங்கள் : 17.3.2018 (சனிக்கிழமை)

நேரம் : 2.00 – 5.00

இடம் : கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி (மஇகா தலைமையகம் எதிர்ப்புறம்)

அனைத்துத் தொடர்புக்கும் : 0163194522 (ம.நவீன்), 0164734794 (தயாஜி)

1 comment for “வல்லினத்தின் இரு நிகழ்ச்சிகள்

  1. ஏ. பி ராமன், சிங்கப்பூர்
    February 3, 2018 at 12:13 pm

    வெற்றிக்கு வாழ்த்துக்கள் !
    ஏ.பி.ராமன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...