வல்லினத்தின் இரு நிகழ்ச்சிகள்

BANNERசீ.முத்துசாமியின் படைப்புலகம்:  கலந்துரையாடல்

விஷ்ணுபுரம் விருது பெற்றதைத் தொடர்ந்து எழுத்தாளர் சீ.முத்துசாமியின் படைப்புலகம் குறித்த அறிமுகக் கூட்டமும் அவரது ஆவணப்பட வெளியீடும் வல்லினம் ஏற்பாட்டில் நடக்க உள்ளது.

மலேசிய நவீன இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான அவரது மண்புழுக்கள் நாவல், குறுநாவல் தொகுப்பான இருளுள் அலையும் குரல்கள் மற்றும் சிறுகதைகள் குறித்த உரைகள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். மேலும் ‘ரப்பர் விதைகளுடன் விளையாடும் கலைஞன்’ எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட அவரது ஆவணப்படத்தை சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் வெளியீடு செய்து உரையாற்றுவார்.

மா.சண்முகசிவாவின் வாழ்த்துரையுடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் அவரது நாவல்கள் குறித்து தயாஜியும், குறுநாவல்கள் குறித்து அ.பாண்டியனும் சிறுகதைகள் குறித்து ம.நவீனும் உரையாற்றுவர்.

முற்றிலும் இலவசமாக நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் மலேசிய கலை இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொள்ள வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறோம்.

சடக்கு இணையத்தளம் அறிமுகம்

வல்லினம் இலக்கியக் குழுமத்தின் மாபெரும் முயற்சியில் தயாராகியிருக்கும் ‘சடக்கு’ இணையத்தளமும் இதே நிகழ்ச்சியில் வெளியீடு காண்கிறது.  சடக்கு தளத்தில் முன்னோட்டத்தைக் காண: சடக்கு முன்னோட்டம்

50, 60, 70களில் நடந்த முக்கிய மொழி, இலக்கிய நிகழ்ச்சிகள் தொடர்பான படங்கள் அதில் பங்குபெற்ற அல்லது முன்னெடுத்த ஆளுமைகளின் படங்கள் அவை குறித்த விளக்கங்கள் அடங்கிய இந்த இணையத்தளம் மலேசிய இலக்கிய வரலாற்றின் தொகுப்புத்தளமாகத் திகழும். பல இலக்கிய ஆளுமைகளின் ஆவணப்படங்களும் இதே தளத்தில் தொகுக்கப்படுவதோடு அவர்களது புகைப்படங்களின் தொகுப்பும் இத்தளத்தில் இடம்பெறும். இந்த அகப்பக்கம் மலேசிய இலக்கிய வரலாற்றில் அறிய பொக்கிஷமாக விளங்கும்.

வரலாற்று ஆவணத்தொகுப்பாளர் ஜானகிராமன் அவர்களால் இத்தளம் அறிமுகம் காணும்.

நிகழ்ச்சி விபரங்கள் : 17.3.2018 (சனிக்கிழமை)

நேரம் : 2.00 – 5.00

இடம் : கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி (மஇகா தலைமையகம் எதிர்ப்புறம்)

அனைத்துத் தொடர்புக்கும் : 0163194522 (ம.நவீன்), 0164734794 (தயாஜி)

3 comments for “வல்லினத்தின் இரு நிகழ்ச்சிகள்

 1. ஏ. பி ராமன், சிங்கப்பூர்
  February 3, 2018 at 12:13 pm

  வெற்றிக்கு வாழ்த்துக்கள் !
  ஏ.பி.ராமன்.

 2. kalaiselvi govindaraju
  March 5, 2018 at 4:17 pm

  மலேசிய இலக்கியம் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது.

 3. கா. சதாசிவம்..
  March 10, 2018 at 7:27 pm

  தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டுத் தெரிவித்துக் கொண்டிருப்பர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...