சடக்கு அறிமுகமும் சீ.முத்துசாமி படைப்புலகமும்

19வல்லினம் சம கால இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வது மட்டுமல்லாமல் வரலாறு மற்றும் ஆவணத் தொகுப்பிலும் ஊக்கத்துடன் செயல்பட்டு வரும் இயக்கம். தொடர்ந்து ஆவணப்படங்களை வெளியிடுவதுடன்  தகுந்த படைப்பாளிகளைக் கௌரவிக்கவும் அவர்களின் படைப்புகளை தீவிரமான வாசிப்புப்  பரப்புக்கு முன்னெடுத்துச் செல்லவும்  வல்லினம் முனைப்பு காட்டி வந்துள்ளதை மலேசிய இலக்கியத்தை ஊன்றி கவனித்து வரும் யாரும் மறுக்க முடியாது. அவ்வகையில் கடந்த 17.3.2018இல் வல்லினம் ஏற்பாட்டில் ‘சடக்கு’ இணையத்தள அறிமுகம் மற்றும் சீ.முத்துசாமி படைப்புலகம் குறித்த கலந்துரையாடல் அங்கமும் நடத்தப்பட்டது.

01இந்நிகழ்ச்சிகள் இரு வேறு காரணங்களுக்காக வடிவமைக்கப்பட்டிருந்தன. முதலாவது ‘சடக்கு’ எனும் ஆவணப்படத்தொகுப்பின் இணையத்தளம் பரவலான பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஒருவருடமாக நடைபெறும் இந்தப் புகைப்பட மற்றும் ஆவணங்கள் தொகுக்கும் பணியின் அவசியத்தை வலியுறுத்தவும் அந்த முயற்சியில் ஆர்வம் உள்ளவர்களை இணைக்கவும் நிகழ்ச்சி உருவாக்கப்பட்டிருந்தது. அடுத்து சீ.முத்துசாமியுடனான கலந்துரையாடல். தமிழகத்தில் விஷ்ணுபுரம் விருதுபெற்ற படைப்பாளியான சீ.முத்துசாமியின் படைப்புலகம் குறித்து அறிய இந்த இரண்டாவது அங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் அவசியத்தை அறிந்த கணிசமான வாசகர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

02

வல்லினம் நிகழ்ச்சிக்குச் சிறப்பு வருகை புரிந்திருந்த எழுத்தாளர் மா. சண்முக சிவா, சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, வரலாற்று ஆவணத்தொகுப்பாளர் மா. ஜானகிராமன், எழுத்தாளர் சீ.முத்துசாமி,  எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும்  வல்லினம் சார்பில் வணக்கத்தைக் கூறி வரவேற்று நிகழ்ச்சி அறிவிப்பாளராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட இரா.சரவண தீர்த்தா சரியாக இரண்டு மணிக்கு நிகழ்ச்சியைத் தொடக்கினார்.

இம்முறை சற்று வித்தியாசமாக வல்லினம் அகப்பக்கத்திலும் வல்லினம் 100லும்  இடம்பெறும் சிறுகதைகளுக்குத்  தொடர்ந்து ஓவியங்களை வரைந்து வரும் இளம் ஓவியரான தீர்த்த பாதா தொடர்ந்து ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளவும் கலை உலகத்துடன் இணைந்து செயல்படவும்  1000 ரிங்கிட்டை ஊக்கத்தொகையாக வழங்கி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. டாக்டர் மா.சண்முக சிவா இத்தொகையை வழங்கினார்.

030512

தொடர்ந்து எழுத்தாளர் மா.சண்முகசிவா அவர்கள் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சி குறித்து விரிவாக விளக்கினார். சடக்கின் தேவை குறித்து கூறிய அவர் சீ.முத்துசாமியின் ஆளுமை குறித்து சுவாரசியமாக உரையாற்றினார். மா.சண்முகசிவா உரை காணொளியைக் காண

நவீன இலக்கியச் சூழலில் தீவிரமாக இயங்கினாலும் வரலாற்றை ஆவணப் படுத்தும் பொறுப்பை ஏற்றிருக்கும் வல்லினம்  தயாரிப்பில் உருவாகியிருக்கும்  சடக்கு இணையத் தளம் தொடர்ந்து அறிமுகம் கண்டது. இத்தளத்தை வெளியீடு செய்து வைக்க மலேசியாவில் முக்கியமான தமிழர் வரலாற்றின் ஆவணத் தொகுப்பாளர் மா.ஜானகி ராமன் அழைக்கப்பட்டிருந்தார். ‘மலேசிய தமிழர்களின் இக்கட்டான நிலை’ என்ற மிக முக்கியமான ஓர் ஆவணத்  தொகுப்பு நூலை வெளியிட்டுள்ள அவர் மலேசியத்   தமிழர்களின் வரலாற்றைத்  தொகுப்பதில் தம்மை அற்பணித்துக் கொண்ட ஆவணத் தொகுப்பாளர். மா.ஜானகி ராமன் சடக்கு இணைத்தளத்தை அறிமுகம் செய்துவைத்தது அந்நிகழ்ச்சிக்குப் பொறுத்தமாக இருந்ததுடன் அவரது ஆவண சேகரிப்பின் தேவை குறித்த உரை பலரையும் கவர்ந்தது. மா.ஜானகிராமன் உரை காணொளியைக் காண

09

சடக்கு இணையத்தளம் செயல்வடிவம் காண முக்கியக் காரணியாக இருந்த விஜயலட்சுமி சடக்கு இணையத்தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என விளக்கம் கொடுத்தார். சடக்கு எனும் கனவு உருவாக அடிப்படைக்காரணமாக இருந்த உணர்வுகளை விளக்கியவர் சடக்கை எவ்வாறு பயன்படுத்துவது என விவரித்தார். தொடர்ந்து அந்தத் தளத்தை அவருடன் துணைநின்று வடிவமைத்த தர்மா அவர்களுக்கும் நன்றி கூறும் வகையில் அன்பளிப்பு வழங்கப்பட்டது.

விஜயலட்சுமி உரை காணொளியைக் காண

 

இதன் பிறகு நிகழ்ச்சி இரண்டாம் அங்கத்தில் நுழைந்தது. இதில் முதல் அங்கமாக11 சீ.முத்துசாமியின் ஆவணப்படத்தின் சுருக்கமான வடிவம் ஒளிபரப்பானது. தமிழகத்தில் விஷ்ணுபுரம் விருது நிகழ்ச்சியில் பலராலும் பாராட்டப்பட்ட இந்த ஆவணப்படத்தை ம.நவீன் இயக்க, செல்வன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தொடர்ந்து எழுத்தாளர் முத்துசாமியின் ஆவணப் பட வெளியீடு நடைபெற்றது. சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் அதனை வெளியீடு செய்து ‘சீ.முத்துசாமி எனும் படைப்பாளி’ என்ற தலைப்பில் உரையாற்றினார். சுவாமி பிரம்மானந்தா உரை காணொளி

13நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடல் பகுதியில் சீ.முத்துசாமியின்  மண் புழுக்கள் நாவல் குறித்து தயாஜியும் அவரது குறுநாவல்கள் குறித்து அ.பாண்டியனும் சிறுகதைகள் குறித்து ம.நவீனும் தம்முடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தயாஜி உரை காணொளி

அ.பாண்டியன் காணொளி

ம.நவீன் காணொளி

இவர்களது உரைகளின் வழி ஓரளவு சீ.முத்துசாமியின் புனைவுலகை வாசகர்கள் அறிந்துகொண்டப்பின் முத்துசாமியின் புனைவுலகத்தையும் அது குறித்த அவரது எண்ணங்களையும் வாசகர்கள் கேள்விகளாக முன்வைக்க ஶ்ரீதர் ரங்கராஜ் அவ்வங்கத்தை வழிநடத்தினார். சீ.முத்துசாமியின் வெளிப்படையான கூர்மையான பதில்களை அரங்கத்தினரைக் கவர்ந்தது. சீ.முத்துசாமியுடனான உரையாடல் காணொளி

நிகழ்ச்சியின் இறுதியில் சீ.முத்துசாமி நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை முடித்துவைத்தார். அதை காணொளியில் காண

100408

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...