விஜிப்ரியா கவிதைகள்

ஒரு வன்மம் சுழற்றி அடிக்கிறதுpatrycja_lewicka_4

புள்ளியில் தான் தொடங்குகிறது .

டார்வின்தியரி போல

பல்கி பெருகி

ஒரு திமிங்கலம் அளவு வளர்ந்துவிட்டது.

வழக்கமான வசைகளை

வாறிஇறைத்து

கற்களை கொண்டு அடித்தும்

வீழ்த்துகிறேன்.

என் வசைகளின் பெருவெள்ளத்தில்

கரை ஒதுங்கி

மூச்சு அறுபட்டு துடித்து சாகும்மென

என நினைத்து நான் நிறுத்துவதில்லை.

வளர்ந்துவிட்ட அவை

என் கண்ணில் படுவதே இல்லை

ஆனால் அவற்றின்

கர்ஜனைகளோ

இருப்போது

ஓயாமல் சுழற்றியபடி இருக்கிறது.

 

***

 

அவன் ஒரு மாயக்காரன்

உடலை நெகழ்த்தி

சிறிய

ரயில் பூச்சியை போல சுருட்டி

அவன் வைத்திருக்கும்

என்னற்ற சிறு பைகளில் இட்டான்

பதாள உலகில் பயணித்து

பெரும் பாம்புகளுக்கு

இரையென வீசியவன்

களைத்து வேடிக்கை பார்க்கிறான்.

ஏறியும் இறங்கியும் பரமபதம்

ஆடும் சர்பங்கள்

நா பிளந்து விறைத்து நின்று

வேடிக்கை பயம் காட்டுகிறது

பல்லிடுக்கில் தங்கியபடி

நேரத்தை உதறி உதறி

கனலை பற்றியபடி

வந்து விழும் என்னை

கண்ணடித்து சொல்கிறான்

வருவேன் என.

 

***

 

இப்போதெல்லாம்

மத்தியான உறக்கம் இப்படியாக இருக்கிறது

நித்திரை தேவன் கண்களுக்கு

மந்திரம் ஏவுகின்றான்

பின் இதமாய்

கால்களை கைகளை பிடித்து

தளர்த்தி விடுகிறான்

ஒரு தேர்ந்த மசாஜ்காரனை போல

சிறிது நேரத்தில் என்னை

மறையும் படி

மாயாவித்தையில் தூக்கி

அலாவுதினின் கம்பளத்தில் பறந்தபடி

கருப்பு படிந்த கதைகள் சொல்கிறான் .

போதும் என எழும்போதெல்லாம்

நெஞ்சில் தட்டி தட்டி

கதைகளை நீட்டிக்கிறான்.

உன் கதைகளோடு இருட்டின்

உலகில் நான் ஒரு கரித்துண்டு

என ஆகிவிடவே ஆசை

மெல்ல கண்விழிக்கையிலோ

பச்சிளம் பிள்ளை போல

வீறிட்டு அழுகிறான்.

2 comments for “விஜிப்ரியா கவிதைகள்

  1. BHARATHI MOORTHIAPPAN
    June 30, 2019 at 10:56 pm

    மகிழ்ச்சி விஜி

  2. penniamselvakumariselvakumari0020
    July 15, 2019 at 9:03 pm

    விசியின் கவிதைகள் உணர்வு பிழம்பு கர்சனையின் சன்னமான குரல்..அழகிய வடிவம்…

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...