வல்லினம்: இளம் எழுத்தாளர் விருது

முன்னுரை

வல்லினம் அவார்ட்கடந்த பல ஆண்டுகளாக வல்லினம் இலக்கிய குழு, மலேசிய இளஞர்களை இலக்கியத்தின் பால் ஈர்க்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. கோட்பாட்டு இலக்கிய பட்டறைகள், இலக்கிய முகாம்கள், கலந்துரையாடல் என பல நிகழ்ச்சிகளின் வழி மலேசிய இளைய சமூகத்திற்கு தீவிர இலக்கிய புரிதலை உருவாக்கவும் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்சியாக, இவ்வாண்டு தொடங்கி இளைஞர்களளின் எழுத்தாற்றலை அங்கீகரிக்கும் விதமாக வல்லினம் இளம் எழுத்தாளர் விருது வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இவ்விருதுக்குறிய எழுத்தாளர் செப்டம்பர் மாத வல்லினத்தில் அறிவிக்கப்படுவார்.

நோக்கம்

மலேசியாவில் புனைவு அல்லது புனைவல்லாத எழுத்துகளில் முனைப்புடன் செயல்படும் இளம் எழுத்தாளர்களை கவனப்படுத்துவது.

இளம் எழுத்தாளர்களுக்கு எழுத்துறையில் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அதிகரிப்பது.

விதிமுறைகள்

வல்லினம் மலேசிய மூத்த படைப்பாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வழங்கும் வல்லினம் விருது போன்றே வல்லினம் இளம் படைப்பாளர் விருதும் மலேசியாவில் இயங்கும் மிகச்சிறந்த படைப்பாளர்களை அடையாளப்படுத்தவும் அங்கீகரிக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சியாக அமைகின்றது.

வல்லினம் இளம்  எழுத்தாளர் விருது சில அடிப்படைகளையும் தகுதிகளையும் கொண்டுள்ளது

1. மலேசிய எழுத்தாளராக இருக்க வேண்டும்.
2. முப்பத்தைந்து (35) வயதுக்கு மேற்போகாதவர்களாக இருக்க வேண்டும்
3. வல்லினம் இளம் எழுத்தாளர் விருது ரிம2000 தொகையும் கோப்பையும் நற்சான்றிதழும் உட்படுத்திய விருதாகும்.
4. வல்லினம் இளம் எழுத்தாளர் விருது எழுத்தாற்றல் சார்ந்த பொதுவான விருதாகும்.  புனைவு (சிறுகதை, நாவல், கவிதை, நாடகம்) அல்லது அபுனைவு (இலக்கியம், அறிவியல், சூழியல், அரசியல், சமூகவியல் கட்டுரைகள்) வகைகளில் (ஏதாவதொன்றில்) தொடர்ந்து எழுதுபவராக இருக்கவேண்டும்.
5.  படைப்புகள் அச்சு ஊடகங்கள் அல்லது மின் ஊடகங்களில் பிரசுரம் கண்டிருக்க வேண்டும். மாநாடுகளில் வாசிக்கப்படும் கட்டுரைகள் பரிசீலிக்கப்படாது. நூல் வெளியிட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
6. வல்லினம் இளம் எழுத்தாளர் விருது ஆண்டுதோறும் கொடுக்கப்படும் விருது அல்ல. அது வல்லினம் குழுவினரின் முடிவுக்கு உட்பட்டதாகும்.
7. விருது பெருவோர் பெயர் வல்லினம் அகப்பக்கம் வழியும் கடிதம் வழியும் அறிவிக்கப்படும்.
8. வல்லினம் குழு நியமிக்கும் விருது பரிசீலனை குழுவின் முடிவே இறுதியானது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...