அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை

10307361_1041742342505510_8337013382056083632_n

இன்றைய அறிவியல் காலத்தில், உலகின் ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்படும் ஒரு நவீனத் தொழில்நுட்பம் உடனே உலகம் முழுவதும் பரவிப் புகழ்பெற்று மக்கள் மனதில் நிலைபெறுகிறது. அடுத்த கட்டமாக, உலகநாடுகள் போட்டியிட்டுக் கொண்டு அதே தொழில்நுட்பத்தை மென்மேலும் ஆய்வு செய்யவும் செம்மைப்படுத்தவும் முனைகின்றன. அதோடு, மேலும் பல சிறப்பம்சங்களை இணைத்து அதிநவீன தொழில்நுட்பங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.…

வாசனைபூசிய வாழ்வு

ஸ்ரீதர்ரங்கராஜ்

இந்தக் கட்டுரைத்தொகுப்பில் என்னை மட்டுமன்றி எவரையும் முதலில் ஈர்க்கக் கூடியது அதன் பாசாங்கற்ற குரல்தான். வலிந்து சொற்களைத் தேடி அலங்காரமாக எந்த விஷயத்தையும் சொல்வதில்லை. தனக்கு நடந்த சம்பவங்களை, தனக்குள் எழுந்த கேள்விகளை, நிகழ்ந்த புரிதல்களை அதிகம் மெனக்கெடாமல் செய்தபதிவு இக்கட்டுரைகள். குறிப்பாக, ‘ஊர்க்காரர்கள்’, ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’, ‘பொம்மைகளின் வன்முறை’ போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.…

கலை வகுப்புகள் மாணவ மாணவியரின் சிந்தனைகளை ஒருமுகப்படுத்த உதவும்.

கலாப்ரியா

It is frequently a misfortune to have very brilliant men in charge of affairs. They expect too much of ordinary men.” ― Thucydides பொதுவாக ஒரு பள்ளி ஆசிரியரின், பள்ளி,கல்வியமைப்பு,மாணவர்கள் பற்றிய கட்டுரைகள்-அதிலும் தன்னைப் பின் தங்கிய ஆசிரியனென்று சொல்லிக் கொள்ளும் ஒருவரின் கட்டுரைகள்- அவ்வளவு சுவாரஸ்ய மிக்கவையாக…

பின்தங்கிய மாணவர்கள் என்று யாரும் இல்லை

எம்.ஏ.நுஃமான்

‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ நான் சமீபத்தில் படித்த முக்கியமான நூல்களுள் ஒன்று. அளவில் சிறியது, ஆனால், நம் சிந்தனையைக் கிளறுவது. பள்ளிக் கல்வியாயினும், பல்கலைக்கழகக் கல்வியாயினும் அது மாணவர் மையக் கல்வியாக இருக்கவேண்டும் என்பதையே கல்விச் சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், நடைமுறையில் நமது கல்வி பரீட்சை மையக் கல்வியாகவே இருக்கின்றது. இதன் விபரீதங்களை இந்நூலாசிரியர் நவீன்…

சீ. முத்துசாமியின் ‘இருளுள் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்

சீ.முத்துசாமி

மலேசிய தமிழ் புனைவுலகில் தனி அடையாளத்தோடு மிக நிதானமாக இயங்குபவர் கெடா மாநில எழுத்தாளர் சீ.முத்துசாமி (சீ.மு). நீண்ட காலமாக படைப்பாளராகச் செயல்படும் இவரின் ‘மண்புழுக்கள்’ நாவல் இவரை நன்கு அடையாளம் காட்டியது. அதோடு மலேசிய எழுத்துலகில் தனித்துவம் பெற்ற நாவலாகவும் அது விளங்குகிறது . சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சீ.முவின் குறுநாவல் தொகுப்பு…

மேகங்களுக்கு அப்பால் நீல வானம்

128675305173

ஹரி பார்த்திக்கு சொன்னது : “இன்று காலை தில்லியிலிருந்து கிளம்பிய போது சுசிதாவும் அதே விமானத்தில் வருகிறாள் என்று எனக்கு தெரியாது. இருவரும் சேர்ந்து ஒரே தொழிற் கண்காட்சிக்கு செல்கிறோம் என்றாலும் சுசிதா என்னுடன் பயணம் செய்ய மாட்டாள் என்று தெரியும். நானும் என் பயண விவரங்களை அவளுக்கு தெரிவிக்கவில்லை. கண்காட்சித் திடலுக்கு வந்த பின்னர்…

கேள்விகளிலிருந்து பதிலுக்கு

tayaji cover

என் முதல் புத்தகம் இது. ஐந்தாண்டுகள் வல்லினத்தில் நான் எழுதிய பத்திகளை தேர்ந்தெடுத்து புத்தகமாக்கப்பட்டுள்ளது. பெயருக்குத்தான் பல ஆண்டுகள் எழுதியதாகச் சொல்லிக்கொண்டாலும் அந்தந்த காலக்கட்டத்தோடு சில படைப்புகள் காலாவதியாகிவிடுவதை இந்த நூலுக்காகக் கட்டுரைகளைத் தொகுக்கும் போது உணர்ந்தேன். இது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. எழுத்தென்பது கருத்து ரீதியில் முரண்பட்டாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் காலம் கடந்தும் நிற்கவேண்டும். அப்படியான…

துணைக்கால் தன்மை கொண்ட கட்டுரைகள்

vijaya cover copy

தமிழ் எழுத்துகளில் துணைக்காலுக்கென தனித்த மரியாதை இருப்பதில்லை. அவ்வெழுத்து இன்னொரு எழுத்தைச் சார்ந்தது. ஆனால் அது இல்லாமல் போகுமானால் மொழியைக் குறில் நெடிலுடன் எழுதுவது சாத்தியமே இல்லாமல் தவிக்கும். ஒருவகையில் நான் எழுதியுள்ள கட்டுரைகள் அணைத்தும் துணைக்கால் தன்மை கொண்டவைதான். இத்தலைப்புகளைக் குறித்து அறிமுகமும் புரிதலும் இல்லாமல் அது தொடர்பான அனைத்து துறைகளும் இயங்கும். ஆனால்…

வாசகனின் உள்ளத்தை விசாலப்படுத்தும் எழுத்துகள்

அ.பாண்டியன்

இலக்கியம் வாசகனைப் புதிய அனுபவங்களை நோக்கி நகர்த்துகிறது. உயிரோட்டமும் அனுபவ எதார்த்தமும் கொண்ட எழுத்துகள், வாசகனின் உள்ளத்தை விசாலப்படுத்துகின்றன. உலகமொழி இலக்கியங்கள் எல்லாவற்றுக்கும் இருக்கும் பொதுக் குணம் இது. அதேசமயம் ஒரு மொழியின் இலக்கியமானது, அந்த மொழிசார்ந்த இனத்தின் பண்பாடுகளின் அடையாளமாகவும், அரசியல் பதிவாகவும், வரலாற்றுப் பெட்டகமாகவும் அமைந்துவிடுகிறது. சங்க இலக்கியங்கள் தமிழினத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும்…

சொற்களைச் சேமிப்பதும் செதுக்குவதும் கலை

navin pix

ஆத்தா சொன்ன கதைகளைக் கேட்டு வளர்ந்தவன் நான். ஆத்தா அம்மாவின் அம்மா. அவர் கதைகள் சொல்லும் விதம் நூதனமானது. கதைகளில் வரும் கொடூர விலங்காக அவ்வப்போது அவரே மாறிவிடுவார். திடீரென முட்டிபோட்டு நடந்து பயங்காட்டுவார். ஆத்தா சொல்லும் கதைகளை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பதற்றம் தொற்றிக்கொள்ளும். என் உணர்வு நிலைக்கு ஏற்ப ஆத்தா கதைகளின் முடிவையும்…

லீனா மணிமேகலை கவிதைகள்

4d063938-b84e-4dc4-a7c1-55b81c947ff2

உலர்ந்தவை, உலராதவை  1. எனக்குப் பிறகு உன்னைக் காதலிக்கப் போகிறவளைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன் பாவமாய் இருக்கிறது நான் நொறுக்கிப்போட்டிருக்கும் உன்னை எதைக்கொண்டு அள்ளி முடிவாள் நீ மறக்க முடியாமல்  அவ்வப்போது உச்சரிக்கப் போகும் என் பெயர் இரும்புத்துகள்காய் அவள் கண்களை அரிக்கும் உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கழுத்தை, தோள்களை, உதடுகளை, காதுகளை, தேமல்களை,…