உரைவழி உணர்ந்த உண்மை

ம.நவீன் நவீன இலக்கிய முகாமில் இடம்பெற்ற  ஓர் உரைக்கு என்னுடைய புரிதலை எழுதி தர முடியுமா என வினவினார். நான் மறுத்தேன். திரும்பவும் இரண்டாவது முறையாக மதிய அமர்வுக்குக் கேட்கும் பொழுது, மறுக்க முடியாமல் அரை மனத்தோடு சம்மதித்தேன். சம்மதம் தெரிவிக்கும் பொழுது என்ன தலைப்பு? யார் பேச்சாளர்? என எவ்விவரமும் அறியவில்லை. மதிய உணவு…

சுருங்கிய வாசிப்பில் சுணங்கிய மனங்கள்

வல்லினத்தில் நான் சேர்ந்து உணர்வோடு உலா வந்து வாழ்ந்து சரியான ஓர் ஆண்டு. 31.03.2019 இவ்வாண்டு சிறுகதை பரிசளிப்பு விழா, 12.05.2019  சுனில் கிருண்ஷன் அவர்களின் சந்திப்புக் கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டேன். ஞாயிற்றுக்கிழமை எனக்கு வேலை என்பதால் பகுதி நேர வேலையை முடித்து விட்டு, 1.30 மணிக்குள் விமானம் பிடித்து ஜொகூரில் இருந்து நிகழ்ச்சிக்குள்…

வல்லினம் பரிசுக் கதைகள்: என் பார்வையில்

திரைப்படங்கள், சீரியல்கள், ஜனரஞ்சக நாவல்கள் என முன்பு ஆர்வம் கொண்டிருந்தாலும் அவ்வார்வமென்பது தற்பொழுது மாறி நல்ல இலக்கியங்களை வாசிப்பதன் மீதிலான ஈடுபாட்டினை மிகைப்படுத்தியுள்ளது. குறிப்பாகச் சிறுகதைகள். சிறுகதையினை வாசித்து முடிக்கையில் எண்ணக்கிடங்கில் கணக்கற்ற எண்ண அலைகளினை என்னுள் உண்டாக்கி மீள்வாசிப்பிற்குள் என்னை மூழ்கடித்து மிதக்க வைப்பதால் கூட இருக்கலாம். வல்லினம் நடத்திய போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி…

நவீன இலக்கிய முகாம்

வல்லினம் இலக்கியக்குழு மற்றும் கூலிமில் இயங்கும் நவீன இலக்கியக் களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மூன்று நாள் இலக்கிய முகாம் டிசம்பர் 20,21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் கூலிமில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்திலிருந்து எழுத்தாளர் ஜெயமோகன்,  எழுத்தாளர் சு.வேணுகோபால், சாம்ராஜ் மற்றும் அருண்மொழி நங்கை ஆகியோர் கலந்துகொள்கின்றனர். சுமார் 100…

“எழுத்தென்பது பொழுதுபோக்கு அல்ல” – சை.பீர்முகம்மது

மலேசிய நவீன தமிழ் இலக்கிய முன்னோடிகளில் பலராலும் அறியப்பட்ட பெயர் சை.பீர்முகம்மது. 1961இல் சிங்கப்பூரில் வெளிவந்த ‘மாணவன்’ இதழில் முதல் சிறுகதையை எழுதினார். அப்போது தொடங்கி இன்றுவரை சிறுகதை, புதுக்கவிதை, கட்டுரை, விமர்சனம், நாவல் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறார். மலேசிய இலக்கியத்தை தமிழ் பேசும் நிலங்களில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தனியாத தாகம் கொண்ட…

ஆவணப்படம்: சை.பீர்முகம்மதுவின் இலக்கியப் பங்களிப்பு

மலேசிய இலக்கியத்தின் வளர்ச்சியை ஊடாடிப் பார்க்கையில் பலதரப்பட்ட எழுத்தாளர்களின் பங்களிப்பு அதற்கு அச்சாணியாக இருந்ததை அறியமுடிகிறது. மொழியை முதலில் நேசிக்க ஆரம்பித்த அவர்களின் ஆளுமையின் முதல்படி பின்னர் விரிந்து தழைத்துப் பலர் போற்றும் இலக்கிய படைப்புகளைப் பிரசவித்துள்ளது. அவ்வாறான இலக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை அனுபவங்களையும் அவர்கள் கடந்து வந்த பாதைகளையும் அறிந்து கொள்வது இலக்கியச் சூழலில்…

பெண் குதிரை: வாசிப்பு அனுபவம்

எண்பதுகளில் தமிழ் இலக்கியம் பல்வேறு நவீன தாக்கங்களால் கவரப்பட்டு மாற்றங்களையும் தீவிரத்தையும் பெற்றபோதும் மலேசிய படைப்புகள் அதிகமும் மதியுரை கதைகளாகவே படைக்கப்பட்டன. எளிய குடும்பக் கதைகளாக அவை இருந்தன. வெகு சில எழுத்தாளர்கள் மட்டுமே எதார்த்தவியல் தாக்கங்களையும் முற்போக்கு இலக்கியப் பாதிப்புகளையும் தங்கள் படைப்புகளில் வெளிப்படுத்தினர். தீவிர இலக்கிய உந்துசக்தியாக அவர்கள் இருந்தனர்.  அவர்களில் சை.பீர்முகமது…

சை.பீர்முகம்மது சிறுகதைகள்: கட்டுமானத்திற்குள் சிக்கிய கலை

ஜெயகாந்தனின் படைப்பிலக்கியங்கள் மூலமாக உந்தப்பட்டு உருவாகி, அவர் வழி மலேசியப் புனைவிலக்கியங்களை நகர்த்திச் சென்றவர்களின் வரிசை என சிலரைக் குறிப்பிடலாம். எம்.ஏ.இளஞ்செல்வன், அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி போன்றவர்கள் அவ்வாறு உருவாகி ஆழமாகத் தடம் பதித்தவர்கள். சீ.முத்துசாமி மிக விரைவிலேயே மொழியாலும் அகவயப்பார்வையாலும் தனக்கான தனி பாணியை அடையாளம் கண்டார். அரு.சு.ஜீவானந்தன் பெரும்பாலும் பண்பாட்டுடன் முரண்படும் மையக் கதாபாத்திரங்களை…

சை.பீர்முகம்மதுவின் அ-புனைவுலகம்

இந்த உலகத்தை சாமானியன் காண்பதற்கும், இலக்கிய மனம் கொண்ட படைப்பாளி காண்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. ரசனையும் நுண்ணுணர்வும் கொண்ட படைப்பாளி வெறும் புறவயக் காட்சிகளை மட்டும் காண்பதில்லை. அக்காட்சிகளின் ஊடே அகத்தையும் ஊடுருவியே அவனது அவதானிப்பு அமைகிறது. தான் காணும் காட்சிகளை எதிர்காலவியலோடு நுணுகிப் பார்க்கும் சிந்தனையும் வரமென பெற்றவன் உண்மையான படைப்பாளி. ‘கைதிகள்…

மண்ணும் மனிதர்களும்: வரலாற்றில் பயணம்

ஒரு கலைஞனுக்கான உலகம் நிச்சயம் சராசரியர்களிடமிருந்து மாறுபட்டவை. தான் கடந்து போகும் ஒவ்வொன்றையும் வரலாறாக்க தெரிந்தவர்கள் அவர்கள். நமக்கு முன் வாழ்ந்த பல தலைமுறைகளின் வரலாற்றை படைப்பாக்கவும் அறிந்தவர். ஓர் இனத்தை, ஒரு மதத்தை, ஓர் ஆட்சியை, ஒரு மண்ணை அதன் மக்களை, அவர்களின் பின்புலத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன் சென்று அறிய மட்டுமே வரலாறு…