தமிழர் அறிவியலும் சில சந்தேகங்களும்

Geocentric view: இவ்வரைப்படம் புவி மையக் கோட்பாடை குறிக்கிறது. அரிஸ்தோட்டல் ஊகித்த புவி மையக் கோட்பாடை இப்படமானது சித்தரிக்கிறது. மையப்பகுதியில் பூமியும், அதனைச் சுற்றியும் ஞாயிறும் இதர கோள்களும் வரையப்பட்டிருக்கின்றன. படத்தின் வெளிப்பகுதியில், தெய்வங்களின் வரைப்படம் இருப்பதையும் காணலாம்.

தொன்மங்களை (Myths) பொதுவாகக் கற்பனையின் உச்சத்தில் விரித்துரைக்கப்பட்ட கதைகள் என வரையறுத்துக் கூறுவர். காலங்களைக் கடந்து அவை எல்லா சமூகங்களிலும் தொடரப்பட்டு வருவது கண்கூடான ஒன்று. எச்சமயத்தைச் சார்ந்ததாக இருப்பினும் இக்கதைகளில் பொறிக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகளானது விண்ணுலகம் மற்றும் மண்ணுலகைச் சார்ந்தவையாக பெரும்பாலும் இருக்கும். விண்ணுலக கதைகள் பெருவாறாக கற்பனைக் கதைகள் எனக் கொள்ளப்பட்டாலும், மண்ணுலகம் சார்ந்த…

சிறுகதை : இந்தக் கதைக்கு மூன்று தலைப்புகள்

ஆதவன்-தீட்சண்யா

 1. இது திவ்யாவின் கதை திவ்யா என்றதும், கொஞ்சகாலத்திற்கு முன்புவரை ஊடகங்களிலும் நீதிமன்றம் மற்றும் காவல்துறை வட்டாரங்களிலும், அரசியல் கட்சிகளின் மேடைகளிலும் பரபரப்பாக பேசப்பட்ட திவ்யாதான் என்று நீங்களாக நினைத்துக்கொண்டு, அவள் கதைதான் ஊர் உலகத்துக்கே தெரியுமே என்று படிக்காமல் கடக்கக்கூடும். ஆனால் இது அவளது கதையல்ல அவசரகுடுக்கைகளே. ஏனென்றால் அந்தத் திவ்யாவினுடையது கதையல்ல, நம்…

மலேசிய சீன இலக்கியம்: எளிய அறிமுகம். – லீ சூ சீ

சீன இலக்கியம் படம் 01

(சீனக் குடியேறிகள் முதல் மலேசிய சீனர்கள் வரையிலானவர்களின் படைப்புகள்.) முதலாவதாக, ‘சீனர் மலேசிய இலக்கியம்’ (Chinese Malaysian Literature) என்னும் சொல்லாடலே, தற்போது பரவலாக புழக்கத்தில் உள்ள ‘மலேசிய சீன இலக்கியம்’(Malaysian Chinese Literature) என்னும் சொல்லைவிட மிக பொருத்தமானது என்பது என் தனிப்பட்ட கருத்து. காரணம் சீன மலேசியர்களால் படைக்கப்படும் இலக்கியம் கருத்தாக்கங்களாலும், அடிப்படைக்…

நிலையாமையில் தினம் தினம்தான் ஏழை சாகிறான்

tayaji pix

சுந்தர ராமசாமியின் எழுத்துகளை தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்தேன். சு.ரா-வின் ‘நா.பிச்சமூர்த்தியின் கலை – மரபும் மனித நேயமும்’ என்ற புத்தககம் கிடைத்தது. சுந்தர ராமசாமியின் பெயருக்காகத்தான் அந்த புத்தகத்தை வாங்கினேன்.  புத்தகத்தைப் படித்த போதுதான் நா. பிச்சமூர்த்தி குறித்தும் அவரது எழுத்து குறித்தும் தெரிந்துக் கொண்டேன். ஆனால் அவரின் கவிதைகளோ, சிறுகதைகளோ இங்கே  கிடைப்பது அரிதாக இருந்தது.…

பதிவு: ஜெயமோகனுடன் ஓர் இலக்கிய முகாம்

பிரம்மானந்த சரஸ்வதி

கடந்த 6 வருடங்களாகக் கூலிம் தியான ஆசிரமத்தில் இலக்கியம் சார்ந்து மட்டும் இயங்கி வரும் நவீன இலக்கிய சிந்தனைக்களம் பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் தலைமையில் செயல்பட்டு வருகின்றது. பெரும்பாலும் சாமியார்கள் மலேசியாவில் சமயம், வியாபாரம் என மட்டுமே சமூகத்தை முன்னெடுப்பார்கள். ஆனால் பிரம்மானந்த சரவஸ்வதி அவர்கள் மிக முக்கியமான படைப்பாளியாக இலக்கிய வாசிப்பு சார்ந்து சமூகத்தையும்…

ப. சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் : காலம் கடந்து கண்டெடுக்கப்பட்ட வைரம்.

அ.பாண்டியன்

தமிழ் நாவல்களை தீவிரமாக தேடிப் படிக்கும் வசகர்கள் முதல் விமர்சகர்கள் வரை சிறந்த தமிழ் நாவல்கள் என்று குறிப்பிடும் பட்டியலில் கட்டாயம் இடம் பிடிப்பது பா. சிங்காரத்தின் கடலுக்கு அப்பாலும் புயலிலே ஒரு தோணியும் ஆகும். பா. சிங்காரம் இவ்விரண்டு படைப்புகளை மட்டுமே தமிழ் இலக்கிய உலகுக்கு விட்டுச் சென்றிருக்கிறார். இவ்விரண்டு நாவல்களின் தோற்றமும் அவை…

வெறி நாய்களுடன் விளையாடுதல் : குழந்தை மனமும் மனிதமும்

பூங்குழலி கட்டுரை

ம.நவீனின் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பத்து ஆண்டுகளுக்கு மேல் நவீனின் கவிதைகளுடன் எனக்கு பரிச்சயம் இருக்கிறது. தொடர்ந்து நான் கவிதைகளோடு பயணிப்பதற்கு நவீனும் நவீனுடைய கவிதைகளும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் நான் எப்போதும் உணர்ந்தே வந்திருக்கிறேன். அந்த வகையில் நவீனின் நட்புக்கு எனது அன்பினைத் தெரிவித்துக் கொண்டு இந்த தொகுப்பில் என்னைக் கவர்ந்த…

கே.பாலமுருகன் கவிதைகள்: நசுக்கப்பட்டவர்களின் அழகியல்.

07

நாவல், சிறுகதை, கட்டுரைகள் போன்ற இலக்கிய படைப்புகளை விமர்சிக்கும் அதே பாணியில் கவிதையையும் அணுக முடியும் என்பது எனக்கு சரியாக படவில்லை. காரணம் சிறந்த கவிதைகள் யாவுமே பன்முகத்தன்மை கொண்டனவாகவே உள்ளன. இதன் காரணமாகவே நமது பண்டை கவிதைகளும் கால மாற்றத்திற்கு ஏற்ப புதுப்புது விளக்கங்களை தந்த வண்ணம் உள்ளன. தமிழ் இலக்கிய மரபிலும் கவிதைகளுக்கு…

நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்: ஒரு பார்வை

ஒரு கவிதைப் படைப்பானது எப்போது உணர்வுகளை ஊடுருவிச் செல்கின்றதோ அப்போதே  அது ஒரு வெற்றிபெற்ற படைப்பாகிறது. அப்படியானதொரு படைப்பினை வெறுமனே கற்றுக் கொள்வதாலோ அல்லது அனுபவத்தாலோ உருவாக்கிவிடமுடியாது. ஒரு நிகழ்தலின் உண்மையை உணர்ந்து,  உணர்ச்சிகளால்  ஊடுருவி பார்க்கும் பார்வை யாருக்கு வாய்கிறதோ, அந்த பார்வையில்  ஒரு அழகியல் கலந்து உணர்வுகளை தளம்பச்செய்யும் வகையில் யாரால் வெளிவிட…

நான்கு கவிதை நூலும் நானும்

கே.பாலமுருகன்

அண்மையில் நான்கு கவிதை நூல்கள் வாசிக்கக் கிடைத்தன. இந்தப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்ட கவிதைகளில் எனது வாசிப்பு அனுபவங்களை நான் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். கே.பாலமுருகனின் தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள். இந்த நூலைத்தான் முதல் முதலில் வாசிக்கத்துவங்கினேன். ம.நவீனின் சிறப்பான முன்னுரையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கவிதைப் புத்தகம், வாசிப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக்கொடுக்கக்கூடிய அற்புத கவிதை நூல் என்று சொன்னால்…