கே.பாலமுருகன் கவிதைகள்: நசுக்கப்பட்டவர்களின் அழகியல்.

07

நாவல், சிறுகதை, கட்டுரைகள் போன்ற இலக்கிய படைப்புகளை விமர்சிக்கும் அதே பாணியில் கவிதையையும் அணுக முடியும் என்பது எனக்கு சரியாக படவில்லை. காரணம் சிறந்த கவிதைகள் யாவுமே பன்முகத்தன்மை கொண்டனவாகவே உள்ளன. இதன் காரணமாகவே நமது பண்டை கவிதைகளும் கால மாற்றத்திற்கு ஏற்ப புதுப்புது விளக்கங்களை தந்த வண்ணம் உள்ளன. தமிழ் இலக்கிய மரபிலும் கவிதைகளுக்கு…

நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்: ஒரு பார்வை

ஒரு கவிதைப் படைப்பானது எப்போது உணர்வுகளை ஊடுருவிச் செல்கின்றதோ அப்போதே  அது ஒரு வெற்றிபெற்ற படைப்பாகிறது. அப்படியானதொரு படைப்பினை வெறுமனே கற்றுக் கொள்வதாலோ அல்லது அனுபவத்தாலோ உருவாக்கிவிடமுடியாது. ஒரு நிகழ்தலின் உண்மையை உணர்ந்து,  உணர்ச்சிகளால்  ஊடுருவி பார்க்கும் பார்வை யாருக்கு வாய்கிறதோ, அந்த பார்வையில்  ஒரு அழகியல் கலந்து உணர்வுகளை தளம்பச்செய்யும் வகையில் யாரால் வெளிவிட…

நான்கு கவிதை நூலும் நானும்

கே.பாலமுருகன்

அண்மையில் நான்கு கவிதை நூல்கள் வாசிக்கக் கிடைத்தன. இந்தப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்ட கவிதைகளில் எனது வாசிப்பு அனுபவங்களை நான் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். கே.பாலமுருகனின் தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள். இந்த நூலைத்தான் முதல் முதலில் வாசிக்கத்துவங்கினேன். ம.நவீனின் சிறப்பான முன்னுரையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கவிதைப் புத்தகம், வாசிப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக்கொடுக்கக்கூடிய அற்புத கவிதை நூல் என்று சொன்னால்…

எம்.கே. குமார் கவிதைகள்

கிணற்றைத் தாண்டி கரையில் ஏறுகிறது நிலவு தொடந்துண்டு கொழுத்த தவளை இயலாமையில் நகர்கிறது.     ஒற்றைக்குரலில் ஓங்கிக் கதருகையில் செவியிழந்தவனின் விழிபோல விதிர்ச்சியாய்க் கிடக்கிறது இரவு.     அண்மையில் உதித்திருந்த உண்மை பழைய பொய்களின் எஞ்சியிருக்கும் சாம்பல்களுக்கிடையில் படாதபாடு படுகிறது. சாம்பலிலும் நழுவி ஓடுகிறது ஒரு துளி.     விஷத்தில் இறங்குதல்…

எஞ்சிய ரத்தம்

அறியாமையின் அடையாளமாய் நிற்கும் சிலுவையை   தன்னை நோக்கி தானே கேட்டுக்கொண்ட வார்த்தையை   எழப்போகும் மூன்றாம் நாளை   உணர்ந்தபடி உறைந்திருந்தது சிலுவையில் எஞ்சிய ரத்தம்    பா.பூபதி

வல்லினத்தின் குறும்படப் பட்டறை

குறும்பட இயக்கமும் அதன் வெளிபாடும் சமகால சமுதாயத்திற்குத் தேவையெனக் கருதி வல்லினம் ‘குறும்பட பட்டறை’யை இவ்வருடம் நடத்த திட்டமிட்டுள்ளது. மலேசிய இயக்குனர்களோடு தமிழக இயக்குனர்களின் பங்களிப்பும் இந்தப் பட்டறையில் இணையும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலேசிய இயக்குனர்கள் சஞ்சை குமார் பெருமாள், பிரகாஷ் ராஜாராம், செந்தில் குமரன் முனியாண்டி போன்றோரின் வழிக்காட்டலுடன் நடைபெறும் இப்பட்டறையின் இறுதியில்…

வல்லினத்தின் புதிய முயற்சிகள்…புதிய உற்சாகம்…

JB Baner 01 copy

கடந்த டிசம்பர் முதல் ‘வல்லினம்’ மலேசிய நாளிதழ்களில் ஓர் அபத்தத்தின் குறியீடாக வெளிப்படுத்தப்பட்டதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். ‘வல்லினம்’ ஆபாசத்தைத் திணிக்கிறது என்றும், ‘வல்லினம்’ மதத்தை அவமதிக்கிறது என்றும் , ‘வல்லினம்’ மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறதென்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள். வேடிக்கை என்னவென்றால், தயாஜியின் ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற சிறுகதை மற்றும் ம.நவீனின் ‘கடவுளின் மலம்’…

வெண்ணிற இரவுகள் ஒரு பார்வை: மலேசியத் தமிழ் சினிமாச்சூழலின் புதிய துவக்கம்

 கடந்த பல வருடங்களாகத் தொடர்ந்து உலக சினிமாக்களையும் மலேசிய சினிமாக்களையும் பார்த்துக் கவனித்தும் வருகிறேன் என்பதைவிட இப்படங்களை விமர்சிப்பதற்கு வேறேதும் விஷேசமான தகுதிகள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஒரு திரைப்படத்தை விமர்சிக்க திரைப்படத்தை இயக்கியவரால்தான் முடியும் என்றால் உலகில் அகிரா குரோசாவா தன் சக இயக்குனர்களின் திரைப்படங்களுக்குச் சினிமா விமர்சனம் எழுதியிருக்கக்கூடும் அல்லது வங் கார்…