Tag: சித்துராஜ் பொன்ராஜ்

ஒரு நீளமான மரணமும் சிக்கலான விளம்பரமும்

புனைவு வாசிப்புக்குள் உள்நுழைகின்ற தொடக்க நிலை வாசகர்களுக்கு, இலக்கியப்பிரதியில் ஆசிரியர் உத்தேசித்த பொருளைப் புரிந்து கொள்வதென்பது புதிரொன்றின் முடிச்சை அவிழ்ப்பதாகவே இருக்கிறது. மற்ற வாசகர்களின் பார்வை அல்லது ஆசிரியரின் பார்வையுடனே மாறுபாடு ஏற்படுகின்றபோது தன் வாசிப்பின் மீதே சந்தேகம் எழுகிறது. அப்படியாகத் தமிழ் புனைவு வாசிப்புக்குள் உள்நுழைகின்ற வாசகன் மெல்ல வந்து சேரும் கோட்பாடுகளில் ஒன்று…

மரயானை: எஞ்சும் படிமம்

இலக்கியத்தில் நிலைபெற்றிருக்கும் சில படிமங்கள் காலாதீதமான கனவுகளை விதைக்கச் செய்கின்றன. அத்தகைய கனவுகளை விரியச் செய்யும் படிமம்தான் ‘மரத்தில் மறைந்தது மாமத யானை’ எனும் திருமந்திர வரி. மரத்தில் ஒளிந்துகொண்டது மாபெரும் யானை எனும் பொருள் தரும் திருமந்திர வரி படைப்பாளர்களுக்குள் இருக்கும் படைப்பு மனத்தைத் தூண்டும் மகத்தான வரி. மரம் நிலைகொள்ளுதலின் குறியீடு. வேரை…