Tag: ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புலகம்

நூற்றாண்டு வரலாறு கொண்ட நவீனத்தமிழிலக்கிய வரலாற்றில் எண்ணிக்கையாலும் தரத்தாலும் மேம்பட்ட பல படைப்புகளின் வாயிலாக மறுக்கமுடியாத இடத்தைப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன். எழுத்தாளர் ஜெயமோகனின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாக அவரின் புனைவுலகம், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், இந்திய ஞான மரபு கட்டுரைகள், சமூகக்கட்டுரைகள் ஆகியவற்றுடன் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் வாயிலாக முன்னெடுத்து வரும் இலக்கிய,…

குமரித்துறைவி: மகளாகிய அம்மையும் அப்பனாகிய மகனும் 

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘குமரித்துறைவி’ குறுநாவல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி, அவரது ஐம்பத்தொன்பதாவது பிறந்தநாள் அன்று அவரது இணையதளத்தில் வெளியானது. கிட்டத்தட்ட நூற்றைம்பது பக்கங்கள் கொண்ட இக்குறுநாவலை வெளியான அன்றே வாசித்து முடித்தேன். வாசிக்கையில் மறைந்த என் அப்பாவின் நினைவும் எனது திருமணக்காட்சிகளும் வந்து, வந்து போயின. வாசிப்பின் சில…

கதைத் திருவிழா சிறுகதைகள்

முடிவற்றுச் சுரந்து கொண்டே இருக்கும் புனைவு மனத்தில் இருந்து மீள முடியாமல் திளைத்திருக்கும்  ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் வெகு சிலரே. தங்களின் வாழ்வு கொடுக்கும் ஆழ் மனப்பதிவுகளாலும் புற உலக வாழ்வை அவதானிப்பதாலும் வாழ்ந்து பார்ப்பவர்கள் அவர்கள். எனவே, தங்களுக்கான தன்னிறைவைக் கலையின் வழியே அடைகிறார்கள். வெண்முரசு நிறைவுற்றபோது  பிறப்பு முழுமையடைந்த மனநிலையை அவரிடம் பார்க்கமுடிந்தது.…

ஜெயமோகனின் நூறு சிறுகதைகள்

1 ஒரு புதிய இலக்கியப் படைப்பென்பது சீட்டாட்டத்தில் வரும் புதிய சீட்டைப் போல, கையிலிருக்கும் சீட்டுகளைப் புதியதோடு சேர்த்து மறுவரிசைப்படுத்துவது. (உண்மையிலேயே) புதிதாக வரும் படைப்புகள், ஒழுங்காகச் சீரமைந்திருக்கும் கடந்தகால படைப்புகளோடு தன்னை இணைத்துக் கொண்டு மேற்சொன்ன மறுவரிசையைக் கோருவதே. இதனையே டி.எஸ்.எலியட், கடந்த படைப்பிற்கும், புதிய வரவிற்குமான ஒத்திசைவு (confirmity between the old…

நீர்ச்சுழலின் பாதை

இலக்கியத்தின் மகத்தான பணியாக வாழ்க்கைக்குத் தேவையான தன்னறத்தைப் போதித்தலை ஜெயமோகன் மீள மீளக் குறிப்பிட்டிருக்கின்றார். உலகின் சரிபாதி மக்கள் தத்தம் இல்லங்களில் உறைந்து இயல்பு வாழ்வு கெட்டு இருக்கும் கொரோனா காலத்துச் சூழலில் வாழ்வு மீதான நம்பிக்கையையும் அறத்தையும் வலியுறுத்துவது இலக்கியம் ஆற்ற வேண்டிய மிக முக்கியமான பணியாக இருக்கிறது. அத்தகைய சூழலில் ஜெயமோகன் நாள்தோறும்…

இன்றைய உலக இலக்கியம்: சில புரிதல்கள்

கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட சிறுகதைப் பட்டறையே நான் கலந்து கொண்ட முதல் இலக்கிய நிகழ்ச்சி. அதற்குப்பின் வல்லினக் குழு நடத்திய எந்தக் கலந்துரையாடலையும், நிகழ்ச்சியையும் தவர விட்டதில்லை. அப்படிதான் இந்த முகாமிலும் வல்லினத்துடனான எனது இலக்கியப் பயணம் நான்காவது முறையாகத் தொடர்ந்தது.  சிறுகதைப் பட்டறையில் என்னை ஓர்இலக்கிய வாசகியாக உருவகித்துக் கொண்ட நான் இலக்கியத்தின்…