Tag: ம.நவீன்

இருள் நிரப்பி மிரட்டும் புனைவு

ம.நவீன் எழுதிய ‘சிகண்டி’ நாவலில் ஒரு பகுதி அதிகம் என்னை ஈர்த்தது. அந்நாவலின் நாயகன் தீபன் அவசரத்தில் இன்னும் தயாராகாத கரிபாப்பை கடையிலிருந்து எடுத்து ருசித்துக் கொண்டே செல்கிறான். அதே நாளில் கரி மீ , நாசி ஆயாம், சென்டோல் என்று வயிற்று பசிக்கேற்பத் தின்றுக் கொண்டே மனதில் திட்டம் ஒன்றை சுமந்து நடக்கிறான். யோசித்துப்…

திரிபுகளின் இருள்வழியே – சிகண்டி

நவீன இலக்கியத்தின் செயல்முறையை இப்படியும் வரையறுக்கலாம். எது ‘வெளியே’ சொல்லப்படாததோ, எது ‘வெளியே’ சொல்லக்கூடாததோ, எது ‘வெளியே’ சொல்ல முடியாததோ அதைச் சொல்ல வந்ததே நவீன இலக்கியம்.  இந்திய இலக்கிய வரலாற்றில் ராமாயண மகாபாரத காலம் துவங்கி பக்தி காலம் வரை, தமிழ் இலக்கிய வரலாற்றில் சிலப்பதிகாரம் தொட்டு கம்ப ராமாயணம், பக்தி காலம் தொடர்ந்து…

மலேசிய நாவல்கள்: ஒரு தீவிர வாசகனின் மறைக்கப்பட்ட குரல்

கடந்த ஆண்டு கோவிட்19 நோய்க் காரணமாக நாடு திடீர் முடக்கத்திற்கு உள்ளாகியிருந்த காலகட்டத்தில் ம.நவீன் சுறுசுறுப்பாக எழுதத் தொடங்கியிருந்தார்.  தொடர்ந்து அவர் படைப்புகளை எழுதி சுடச்சுட என் வாசிப்புக்கு அனுப்பி வைப்பார். நானும் அதே வேகத்தில் அந்தக் கட்டுரைகளையும் கதைகளையும் வாசித்து என் கருத்துகளை குறிப்பிட்டு அனுப்புவேன். அதில் சில விவாதங்களும் தொடர்ந்து கொண்டே இருந்தன.…

மலேசிய நாவல்களும் ரசனை விமர்சனமும்

மலேசியச் சூழலில் கறாரான இலக்கிய மதிப்பீடுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படும் போதெல்லாம் சில கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. அவற்றை, விமர்சனத்தை முன்வைப்பவரின் மீதான தகுதி,  விமர்சன அளவுகோல்  மீதான கேள்விகள் எனத் தொகுத்துக் கொள்ளலாம். மொழியும் இலக்கியமும் யாருடைய தனிப்பட்ட உடைமை இல்லை என்ற வாதமும் அவரவரின் ரசனை வேறுவேறானது; ஆகவே, பொதுவான ரசனை விமர்சன அளவுகோலின்…

மனசை ஆய்ந்த மனசிலாயோ!

பயணங்கள் மிகச் சுவாரசியமானவை. அவ்வப்போது நம்மை  எதார்த்தத்திலிருந்து தப்பிக்கச் செய்து, நமக்கே நம்மை யாரென்று அடையாளங்காட்டி மீட்டெடுப்பன. இந்தச் சுழற்சி இப்படியே தொடர்ந்துகொண்டிருப்பதால்தான் மனிதனால் தன்னியல்பில் செயல்பட முடிகின்றது. பயணங்கள் நின்று போனால், மனம் இறுக்கமுறும். அதன் நீட்சியாகச் செயல்பாடுகளில் சிக்கல் நேரும். உளவியல் சார்ந்த எதிர்பாரா சம்பவங்கள் நிகழும். இவையெல்லாம் நாம் கடந்த ஓராண்டு…

உச்சை: தருணங்களை வியப்பாக்கும் கதைகள்

இன்று மலேசியப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவராக இலக்கியப் புனைவுகளின்வழி தன்னை முன்னிறுத்திக் கொண்டவர் ம.நவீன். கவிதை, கட்டுரை, நாவல், விமர்சனம், பயண இலக்கியம், நேர்காணல்கள் என நீளும் படைப்புகளின் வரிசையில் அவரின் சிறுகதைகள் அதன் தனித்தன்மைகளால் சிறப்பிடம் பெறுகின்றன.  நவீனின் 90 விழுக்காடு சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். அவரின் முதல் சிறுகதை தொகுப்பு மண்டை ஓடி 2015இல் வெளியீடு…

அன்னை ஆடும் கூத்து

அறுவாள் வகைமைகள் பல. தென் தமிழக அடியாட்கள்  வசம் புழக்கத்தில் இருப்பது இரண்டு. ஒன்று வீச்சறுவாள் மற்றது வெட்டறுவாள். வீச்சறுவாளுக்கு படை மிரட்டி என்றொரு பட்டப் பெயரும் உண்டு. குறிப்பிட்ட வகையில் வீச்சறுவாள் கொண்டு வீசி எதிரியை ரத்தம் தெறிக்க (உயிருக்கு ஆபத்து இன்றி) விட்டு, அப்படித் தெறிக்கும் ரத்தம் கொண்டு, அந்த எதிரிக்கு பின்னால்…

விலங்குகள் திரியும் கதைகள்

சமகால மலேசிய புனைவிலக்கிய வெளியில் ம.நவீனின் எழுத்துகள், எண்ணிக்கையாலும் அது அடைந்திருக்கும் வாசகப் பரப்பாலும் கவனம் கொள்ள வைக்கின்றன. ஆழமற்ற நேர்கோட்டுக்கதைகளை அதிகம் வாசித்துப் பழக்கியிருக்கும் மலேசிய வாசக சூழலில் ம.நவீனின் புனைவுகள் மாறுபட்ட வாசிப்பனுபவத்தைத் தருபவை. வாசகனின் உழைப்பைக் கோருபவை. காலத்தால் நிகழக்கூடிய அத்தனை மாற்றங்களையும் உள்வாங்கியே இலக்கியம் பரிணமிக்கிறது. மொழி, சொல் முறை,…

பேய்ச்சி: தமிழர் மானுடவியல் ஓர் அலசல்

யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்த உக்கிரமான பேச்சியம்மனை எழுத்தாளர் ஜெயமோகனின் ‘படுகை’ சிறுகதையில் வாசித்திருக்கலாம்.  அது ஆச்சரியமான தோற்றம்தான். வழக்கத்தில் இல்லாத தோற்றம். ஆனால் பேச்சியம்மன் அவ்வாறான தோற்றத்தில்தான் குமரி நிலத்தில் காட்சியளிப்பதாக ஜெயமோகன் ஓர் உரையில் கூறுகிறார். நாட்டார் தெய்வங்கள் அவ்வாறான தோற்றம் எடுக்கக்கூடியவைதான். இதே பேச்சியம்மன்தான் மதுரை சிம்மக்கல்லில் வேறொரு தோற்றத்தில்…

பேய்ச்சி: பேருரு அன்னையுள் பேயுரு

என் பால்ய வயதிலிருந்தே என் வீட்டில் முருகன்தான் பிரதான சாமியாக இருந்தார். அவர் பக்கத்தில் விநாயகர், ராமர், கருமாரிஅம்மன். பட்டணத்திற்கு குடிபெயர்ந்த பிறகுதான் பேச்சியம்மன் அறிமுகமானாள். கையில் குழந்தையுடன் இருந்தவளைப் பேச்சிய்யம்மன் என்றார்கள். இன்னொரு கோயிலில் மடியில் ஒரு பெண்ணைக் கிடத்தி வயிற்றைக் கிழித்த கோலத்தில் இருந்தது. அதுவும் பேச்சியம்மன் என்றார்கள். கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக்…