
மனித இனத்தின் வாழ்வியல் இருத்தல் தடங்கள்தான் வரலாறு ஆகிறது. அவ்வரலாறுகளைப் பதிவு செய்து ஆவணப்படுத்தும் செயல்பாடுளில் மிக முக்கியமானது வரலாற்று இலக்கியப் புனைவுகள். எல்லாப் புனைவுகளும் ஏதோ ஒருவகையில் ஏதாவதொன்றின் வாழ்வியலைப் பதிவு செய்துகொண்டுதான் வருகின்றன. அவை கலைநுட்பமாகக் காட்சிப்படுத்தப்படும்போது இலக்கியம் எனும் தகுதியைப் பெற்று மிளிர்வதைக் காணமுடிகிறது. 1970கள் தொட்டே கவிதை, நாவல், சிறுகதைகள்…

















