பழக தெரியவேண்டும், பார்த்து நடக்கவேண்டும்!

ஆண் நட்பு என்றாலே அலர்ஜியாகிறது இப்போதெல்லம். இப்போது என்றல்ல எப்போதுமே இந்த உணர்வு என்னிடம் நீறுபூத்த நெருப்பாய் அணையாமல் இருப்பதை நான் தொடர்ந்து உணர்ந்துவந்துள்ளேன். எவ்வளவு அன்பாக கள்ளங்கபடமில்லாமல் பழகினாலும், அந்த உறவில் எப்படியாவது காமம் நுழைந்துவிடுகிறது. அந்தப்பெண் விரும்பியோ விரும்பாமலோ சம்பந்தப்பட்ட அந்த ஆண் நண்பன், எதோ ஓர் உள்உணர்வை மறைத்து வைத்துக்கொண்டுதான் உறவாடியபடி…

பாலினம்

“பாலினம்” (Gender) என்பது ஒருவரின் உடல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட விஷயம். “ஆண், பெண்” என்ற இரண்டு எல்லைகளை வகுத்துக்கொண்டு, அதற்குள் ஒட்டுமொத்த பாலின அம்சங்களையும் இணைக்க முனைவது தவறான விஷயம். அந்த எல்லைகளை தாண்டி இருபதிற்கும் மேற்பட்ட பாலினங்கள் இருப்பதை நாம் இன்னும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். “பாலின ஈர்ப்பு” என்பது பற்றியும் இன்னும் முழுமையான…

என்ன எழவுடா இது?

தேர்தல் முடிந்து இருமாதகாலம் ஆகப்போகிறது. தேர்தல் குறித்த கணிப்பு, முடிவின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி. தங்களைக்கவர்ந்த தலைவர்கள் பதவியில் இல்லாமல் போன ஆதங்கம்.! எலெக்‌ஷன் கமிஷன் செய்துள்ள துரோகம்.! சிலபலரை பதவியில் இருந்து இறக்கப்போடப்படும் கோஷம்.! மாபெரும் கூட்டனிக்கட்சியான ம.சீ.சா எந்த ஒரு பதிவியையும் ஏற்க மறுத்துள்ள அதிரடி நடவடிக்கை.! எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பலரைப் பிடித்து சிறையில்…

பேய்களோடு கொஞ்ச நேரம்

எந்தப் பேயும் இறந்துபோகாமலும் இறந்துபோன பேய்களை எழுப்பியவாறும் முளைத்துக்கொண்டே இருக்கின்றன கதைகள் எல்லார் வாயிலும்… எப்பொழுதும் மனிதர்களைப் பற்றித்தான் பேசுகிறோம். இம்முறை பேய்களைப் பற்றிக் கொஞ்சம் பேசுவோம். பேய்க் கதைகள் என்றாலும் இவற்றிலும் மனிதர்களின் ஆதிக்கம்தான். மனிதனில்லாமல் பேய்கள் ஏது? பெரும்பாலும் எல்லாருக்கும் பேய் பற்றிய பயம் இருக்கிறது. அதனால்தான் பேய்க்கதை  என்றால் சிறார் முதல்…

எந்தப் பறவை எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தை! – வண்ணதாசன்

இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும்… நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது –…

எஸ். ராமகிருஷ்ணனின் ‘எதிர்கோணம்’

நிறைவேறாத ஆசைகள் என்றுமே மனித மனங்களில் எங்கோ ஒரு மூலையில் தேங்கியே கிடக்கின்றன. ஆசையின் அளவு பெரிதாகவோ சில சமயம் சிறியதாகவோ இருக்கலாம். ஆனாலும் முட்டுக்கட்டைகள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நிறைந்து அடைய இயலாமல் செய்து விட்ட சின்ன ஆசைகள் அவ்வப்போது மனதின் முன் தோன்றி படுத்தும் பாடு வாழ்க்கையைவிட கொடுமைக்குரியதாக இருக்கின்றது. நிறைவேறாத ஆசைகளைக்…

எழுத்தாளர்களுக்கு ஒரு சவால்!

மலேசிய மலாய் இலக்கிய வெளி மலாய் எழுத்தாளர்களால் மட்டுமே நிரப்பப்பட்டதல்ல. மலாய்க்காரர் அல்லாத பல எழுத்தாளர்களும் மலாய் மொழியில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும் கவனிக்கத்தக்க படைப்புகளை கொடுத்திருக்கிறார்கள். மலேசிய வாழ் இந்தியர்களும் மலாய் இலக்கிய ஈடுபாடு கொண்டு செயல் பட்டு வருகின்றனர். ஜோசப் செல்வம், என்.எஸ். மணியம், ஆ.நாகப்பன்,…

மரண பயத்துடன் தொடரும் பயணம்

மலையிலிருந்து இறங்கி கொண்டிருந்த போது ஒரு செங்குத்தான இடம். அங்கே மரக்கட்டையின் மேல் கால் வைத்துதான் கவனமாக இறங்க வேண்டும். நான் சரியாகதான் இடம் பார்த்து கால் வைத்தேன். அது மிகவும் செங்குத்தான இடம். இருந்தும் என் காலும் மரக்கிளையில் பதிந்திருந்த என் கையும் எப்படியோ நழுவிவிட்டன. எனக்கு முன்னாடி யாரும் இல்லை. பின்னாடிதான் சிலர்…

நமக்கான குரல்களை நசுக்கி எவ்வளவு தூரம் ஓடிடுவோம்

வானொலியில் அறிவிப்பாளராய் இருப்பதால் அவ்வபோது, அடையாளைப்படுத்துவும், நானும் இருக்கிறேன் என்பதை காட்டவும் சிலவற்றை செய்யவேண்டியுள்ளது. சில வாரங்களுக்கு முன்னால் பேட்டி எடுக்க வந்திருந்தார்கள் ; வழக்கமான கேள்விகளுடன். பொதுவாக இப்படி பேட்டி எடுக்க வருகின்றவர்களிடம் சிலவற்றை கவனிக்கலாம். நம்மை பேட்டி எடுக்க வந்து, நம்மை பற்றி நாம்மையே சொல்ல வைப்பார்கள். நாம் சொல்வதை கவனிக்காமல், அடுத்தடுத்த…

41வது இலக்கியச் சந்திப்பு – யாழ்ப்பாணம் 2013 (குவர்னிகா – இலக்கியச் சந்திப்பு மலர் வெளியீடு)

41வது இலக்கியச் சந்திப்பு  (இலங்கை – யாழ்ப்பாணம்) எதிர்வரும் யூலை 20 – 21ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கீழ்வரும் வகையில் இலங்கை இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி உள்ளடக்கங்கள் அமையும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம், பன்மைத்துவம், சமனிலை என்பவற்றின் அடிப்படையில் ஈழ இலக்கியத்தில் பேசுபொருளாக இருந்த – இருக்கின்ற அனைத்து விடயங்கள் பற்றியும் எத்தகைய சார்பு…

மலேசிய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி

கைக்கு வந்தது வாய்க்கு எட்டவில்லை என்று சொல்வார்கள். அந்த மாதிரிதான் பேராக் மாநிலத்திலும் நடந்தது. ஆட்சியில் ஒரு மாற்றம் செய்ய வேண்டும். அப்படித்தான் பேராக் மாநில மக்கள் நினைத்தனர். ஆனால், மாற்றம்தான் மாறிப் போய்விட்டது. மனுஷத் தலைகள் மாறவில்லை. அடுத்த வீட்டுக்காரன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போன கதையாகிப் போனது. இப்படியும் சொல்லலாம். புதுப்…