Tag: பேய்ச்சி

பேய்ச்சி: பிரளயமும், ஆனந்த சயனமும்

நமது புராணங்களில்  வரும் உருவகங்கள், படிமங்கள், எப்போதும் நம்மை நிலைக்குலையவும், நிலைபெறவும்  செய்பவை. அன்றாட செயல்பாடுகளினூடாக, இன்றும் நம்மை சுற்றி சூழ்ந்துள்ளவை.  நம் அறையில் தொங்கிக்கொண்டிருக்கும், காலண்டரிலும், வீதிகளின்  விளம்பரங்களிலும், மக்கள் நாவில் எழுந்து வந்து செல்லும், வார்த்தைகள் ஊடாகவும் என எண்ணிலடங்கா  உருவக வெளி அது. அப்படி ஒரு திகைப்பையும், நிறைவையும் தரும் இரண்டு…

பேய்ச்சி நாவலுக்குத் தடை: ஒரு முழுமையான விளக்கம்

19.12.2020 அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தபோதுதான் ‘பேய்ச்சி’ நாவல் தடை செய்யப்பட்டதை அறிந்துகொண்டேன். சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் இந்த கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும்  இந்த நேரம் வரை பேய்ச்சி நாவல் தடை குறித்த எந்த அறிவிப்பும் உள்துறை அமைச்சிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எனக்கு கிடைக்கவில்லை. ஊடகச்செய்திகள் வாயிலாகத்தான் நானும் அறிந்துகொண்டிருக்கிறேன்.

அன்னை ஆடும் கூத்து

அறுவாள் வகைமைகள் பல. தென் தமிழக அடியாட்கள்  வசம் புழக்கத்தில் இருப்பது இரண்டு. ஒன்று வீச்சறுவாள் மற்றது வெட்டறுவாள். வீச்சறுவாளுக்கு படை மிரட்டி என்றொரு பட்டப் பெயரும் உண்டு. குறிப்பிட்ட வகையில் வீச்சறுவாள் கொண்டு வீசி எதிரியை ரத்தம் தெறிக்க (உயிருக்கு ஆபத்து இன்றி) விட்டு, அப்படித் தெறிக்கும் ரத்தம் கொண்டு, அந்த எதிரிக்கு பின்னால்…

பேய்ச்சி: அன்னையின் பேய்மையும் அதீதத்தின் திரிபும்

‘பேய்ச்சி’ நாவலைப் பற்றிய எனது வாசிப்பனுபவத்தை எழுதுவதற்கு முன்பு பேச்சியைப் பற்றிய எனது அறிதல்களையும் அனுபவங்களையும் முதலில் எழுத விரும்புகிறேன். என்னுடைய சிறுவயதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அந்தச் சம்பவத்தைப் பார்த்தேன். அம்மாச்சி வீட்டிலிருந்த நாய் ஒன்று குட்டிகள் ஈனுவதைச் சிறுவர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென்று நாங்கள் எதிர்பார்க்காத வகையில் நாய் தனது குட்டி ஒன்றைச் சாப்பிட…

மூன்று நாவல்களும் முழுமையின் கலைவடிவும்

காலங்களில் படர்ந்து கிடக்கும் வாழ்வின் அவதானிப்பையும், நிலங்களின் குறிப்பையும், வாழ்வின் ஓசையையும் அதன் நிசப்தத்தையும் விரிந்த தளத்தில் பேசக்கூடிய இலக்கிய வடிவம் நாவலாகும். மொழியால், மீட்டெடுக்கப்படும் உணர்வுபூர்வமான வரலாறுகள் அவை. மலேசியாவைப் பொறுத்தவரை சிறுபான்மை இனமாக இருப்பதாலேயே தமிழ் நாவல்களில் வரலாற்றுக் குறிப்புகளுக்கு முக்கியத்துவம் அதிகம். யாருடைய வரலாறு அழியும் பலவீனத்தைக் கொண்டுள்ளதோ அவை மறுபடி…

பேய்ச்சி: தமிழர் மானுடவியல் ஓர் அலசல்

யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்த உக்கிரமான பேச்சியம்மனை எழுத்தாளர் ஜெயமோகனின் ‘படுகை’ சிறுகதையில் வாசித்திருக்கலாம்.  அது ஆச்சரியமான தோற்றம்தான். வழக்கத்தில் இல்லாத தோற்றம். ஆனால் பேச்சியம்மன் அவ்வாறான தோற்றத்தில்தான் குமரி நிலத்தில் காட்சியளிப்பதாக ஜெயமோகன் ஓர் உரையில் கூறுகிறார். நாட்டார் தெய்வங்கள் அவ்வாறான தோற்றம் எடுக்கக்கூடியவைதான். இதே பேச்சியம்மன்தான் மதுரை சிம்மக்கல்லில் வேறொரு தோற்றத்தில்…

பேய்ச்சி: பேருரு அன்னையுள் பேயுரு

என் பால்ய வயதிலிருந்தே என் வீட்டில் முருகன்தான் பிரதான சாமியாக இருந்தார். அவர் பக்கத்தில் விநாயகர், ராமர், கருமாரிஅம்மன். பட்டணத்திற்கு குடிபெயர்ந்த பிறகுதான் பேச்சியம்மன் அறிமுகமானாள். கையில் குழந்தையுடன் இருந்தவளைப் பேச்சிய்யம்மன் என்றார்கள். இன்னொரு கோயிலில் மடியில் ஒரு பெண்ணைக் கிடத்தி வயிற்றைக் கிழித்த கோலத்தில் இருந்தது. அதுவும் பேச்சியம்மன் என்றார்கள். கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக்…

வேரறிதல்: ம.நவீனின் ‘பேய்ச்சி’

அக்காலத்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குலசேகரத் தம்புரான் என்ற சிற்றரசர் இருந்தார். அரசராக அவர் இருந்தபோதிலும் உண்மையான அதிகாரம் ஏழு நாயர் தரவாட்டு குடும்பங்களிடம் இருந்தது. இவர் ஒருமுறை சமஸ்தானத்தை விட்டு வெளியில் சென்றபோது ரேணுகா என்ற தெலுங்குப் பெண்ணிடம் காதல் கொண்டார். அவளை மணமுடித்து இங்கு அழைத்து வந்தார். தெலுங்கு பெண்ணென்பதால் அவளை வடுகச்சி என்றழைத்து…