Tag: வெண்முரசு

வெண்முரசு முன் ஒலிக்கும் மூன்று கேள்விகள்

வெண்முரசு படைப்பு குறித்த உரையாடலின்போது நண்பர் ஒருவர் இக்கேள்வியை முன்வைத்தார் – இன்றைய காலத்தில் இப்படைப்பின் அவசியம் என்ன? நான் இந்தக் கேள்வியை அப்படைப்பு உருவான நாள்முதல் வெவ்வேறு விதங்களில் சந்தித்து வருகிறேன். ஆகவே இம்முறை நண்பரிடம் நிதானத்துடன் அணுக முயன்றேன். “சரி, இந்தப் படைப்பு இன்றைய காலத்திற்குப்  பொருந்தாது எனில் எந்தக்காலத்திற்குப் பொருந்தும் என…

வரலாற்றுடன் உரையாடுதல்

(1) இதிகாசங்கள் என்பவை பொதுவாக உரையாடல்தான். முன்னர் நிகழ்ந்ததைச் சொல்பவை. இவ்வாறு வியாசர் வினாயகரிடம் சொல்லி அவர் எழுதிய ஜயகதையைச் சொல்கிறேன் என்று வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் அவையில் சொல்லும்போது அதைக் கேட்ட செளதி (சூததேவர்) பிற்காலத்தில் செளனகரிடம் உரைப்பதுதான் மஹாபாரதமாக நமக்குக் கிடைப்பது.  அந்த இதிகாசம் இலக்கியத்துக்குள் வரும்போது அதுவும் ஒரு உரையாடலாகத்தான் நிகழ்கிறது. அது…

வெண்முரசு: ஒரு தன்னுரை

2013 இறுதி. ஒருநாள் ஆசிரியர் ஜெயமோகன் அழைத்திருந்தார். வியாச பாரதத்தை, அந்தக் களத்தைத் தனது தேடல் வெளியாகக் கொண்டு, வெண்முரசு எனும் தலைப்பில் பெரும்புனைவாக எழுதப் போவதாகக் கூறினார். எனக்கு அது ஆச்சரியம் அளிக்கும் விஷயம் இல்லை. காரணம் வெளியே அறிவிக்கும் முன்பே வேறொரு நிகழ்வின் பொருட்டு அவர் மகாபாரதத்தை எழுதத் துவங்கிவிட்டார். துரியோதனன் பிறப்பு…

குருபூர்ணிமா: கலையும் வாழ்வும்

கலைக்குள்ளிருக்கும் நுட்பத்தை உரையாடுவது இலக்கியச் சந்திப்புகளில் பிரதானமான அம்சம். அதைக்காட்டிலும் அதன்  அடிக்கல்லாய், வேராய்ப் படிந்து கிடக்கும் கலைஞனின்  கைரேகைகளை  அறிவதும் சுவாரசியமானது. அது இளம் படைப்பாளிகளின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று எனலாம். குரு பூர்ணிமா ஒரு கலைநிறைவின் கொண்டாட்டமாகி 5 ஜூலை 2020 அன்று நடந்தபோது எழுத்தாளர் ஜெயமோகனுடனான உரையாடலை யூடியூப் வழி கண்டேன்.…