சிறுகதை: போயாக்

டாக்சி ஓட்டி பிடித்த மட்டமான சிகரெட் வாடை அவ்வதிகாலையின் சாந்தத்தைக் கெடுத்தது. சீபு விமான நிலையத்தில் இருந்து ‘காப்பிட்’ அழைத்து செல்வதாக ஏற்றியவரின் டாக்சி, முப்பது நிமிட நேர பயணத்திற்குப்பின் சாலை விளக்குகள் இல்லாத கம்பத்துப்பாதையில் குலுங்கியபடி நகர்ந்தது. ஓர் ஆற்றின் துறைமுகத்தில் என்னை இறக்கியப்பின் கிளம்பிவிட்டார். சட்டென குளிர் சூழ்ந்துகொண்டது. நான் ஆற்றங்கரையோரம் பள்ளிக்கூடத்தைத் தேடுவதைப் பார்த்த படகோட்டி ‘என்ன’ என்பதுபோல தலையை ஆட்ட கைகள் இரண்டாலும் கூம்புபோல இணைத்துக்காட்டி “ஸ்கோலா” எனக்கத்தினேன். ஏறும்படி சைகை … Continue reading சிறுகதை: போயாக்