
தங்கமீன் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் ஏப்ரல்மாதம் நடைபெற்ற நாவல் பயிலரங்கில்தான் மலேசிய எழுத்தாளர் திரு கோ.புண்ணியவான் அவர்களை முதன் முதலில் சந்தித்தேன். தனது எழுத்துலக அனுபவத்தை பார்வையாளர்களிடம் விரிவாக பகிர்ந்துகொண்ட அவர் தனது நாவலான ‘செலாஞ்சார் அம்பாட்’டைப் பற்றி குறிப்பிட்டு பேசினார். அன்றுமுதல் இந்நூலை சிங்கை நூலகங்களில் தேடத்தொடங்கினேன். என்னோடு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த இந்நாவல் இரண்டுவாரங்களுக்கு…