அடிவருடர்கள்

சிமெண்ட் மணல் நீர் கட்டிடத்தின்kavithai
பிரகாசமான அலங்காரக் குவியல்களில்
தாள்கள் சிலநூறு பரபரத்துக் கொண்டிருக்கின்றன
இயந்திர விசிறிக் காற்றில் வரிகள் மாறாமல்
சொற்கள் பிசகாமல்
எழுத்துகள் தேயாமல்

காயம்பட்ட நாரையின் அதிஅரூப
வாதைமறந்த மகிழ் நொடிகளைப்போல்
அவ்வப்போது அதனர்த்தங்கள் மாற்றப்பட்டதும்
படுவதும்
தற்காலிக ஏமாற்று தேவைக்கே
பரபரத்திடா தாள்களும் ஒருசேர அடங்கிய
அப்புத்தகங்களின் அட்டைப்பட தலைப்புகளூடாக
அடிவருடிய பெயர்களாய் அச்சாகியிருப்பதெல்லாம்
வெகு நிலங்களைக் கடந்து
நுனிப்புல் மேய்ந்த பட்டி ஆடுகள்
போட்ட சாணியுருண்டைகளை உருட்டிய
வண்டுகளுடையதுதான்

இதுகாறும் மிக நேர்த்தியாய்
சாணியுருண்டைகளை உருட்டிய அவ்வண்டுகள்
இப்போது சாணியுருண்டைகளாகவே மாறவேண்டி
பெரும்பிரயத்தனத்தில் விரைந்தோடத் துவங்கியிருப்பதை
அறிவீராக!

 

2 கருத்துகள் for “அடிவருடர்கள்

 1. Sarwan
  July 14, 2017 at 5:57 pm

  அருமை நண்பா

  • NurpaVinaignan
   August 7, 2017 at 6:24 pm

   Mikka nandri nabaa

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...