சீ. முத்துசாமி எனும் எழுத்தாளரை நான் முதன்முறையாக சந்தித்தது 2005இல் நடைபெற்ற ஆஸ்ட்ரோ நாவல் போட்டியின் பரிசளிப்பு விழாவில்தான். அவர் எழுதிய ‘மண்புழுக்கள்’ நாவலுக்கு முதல் பரிசும் நான் எழுதிய ‘ஞானத்தின் வாசலிலே’ எனும் நாவலுக்கு இரண்டாவது பரிசும் கிடைத்தது அந்தப் போட்டியில்தான். பரிசளிப்புக்கு முன்பே தனியாக நின்றுக்கொண்டிருந்த அவரிடம் சென்று என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன். எவ்வித ஆர்வமும் இல்லாமல் பேசினார். பதில்கள் எல்லாம் ஏசுவதுபோலவே வெடுக்கென இருந்தன. அப்போது என்னை இலக்கியச் சூழலில் பலருக்கும் தெரியாது. நான் ‘நயனம்’, ‘மன்னன்’ போன்ற வெகுசன இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தேன். எனக்கென தனி வாசகர் பட்டாளம் இருந்தது. முத்துசாமி அந்த வெகுசன இலக்கியச் சூழலுக்கு அந்நியமானவர். வெகுசன இதழ்களில் எழுதுவோரைப் பொருட்டாகக் கருதாதவர்.
Continue readingஅஞ்சலி
அஞ்சலி: மஹாத்மனின் இரகசியப் பயணம்

மஹாத்மன் இறந்துவிட்டார்.
அவர் இறந்து மூன்று வாரங்கள் ஆகின்றன என சற்று முன்னர்தான் தெரிய வந்தது. அவர் இறந்ததை அவர் மனைவியும் அண்ணனுமே இன்றுதான் தெரிந்துகொண்டனர் என்பது மேலும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த மஹாத்மனை மூன்று வாரங்களாக அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் பார்க்க வரவில்லை எனும் உண்மை சங்கடத்தை அளித்தது. நெஞ்சு வலியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் வழியிலேயே இறந்துள்ளார். இறுதி காரியங்கள் மருத்துவமனையிலேயே செய்துமுடிக்கப்பட்டு இஸ்லாமிய முறைபடி அடக்கம் செய்யப்பட்டார் எனக்கூறப்பட்டது.
Continue readingஅ. ரெங்கசாமிக்கு அஞ்சலி

ஜனவரி 13 ஆம் திகதி அ. ரெங்கசாமியின் மூத்த மகன் சுந்தரத்திடமிருந்து அழைப்பு வந்தபோதே அது ஏதோ துக்கமான செய்தியைத் தாங்கி வருவதாக உள்ளுணர்வு சொன்னது. பெரும்பாலும் துக்கச் செய்திகளைத் தாங்கி வரும் அழைப்புகளுக்கு அத்தகைய தன்மை இருப்பதுண்டு. அவ்வழைப்புகளின் சத்தம் அழுகைபோல ஒலிக்கக்கூடியது.
“அப்பா இறந்துட்டாருய்யா,” சுந்தரம் அண்ணனிடமிருந்து சுரத்தில்லாதச் சொற்கள்.
Continue readingசை.பீர்முகம்மதுவுக்கு அஞ்சலி

சை.பீர்முகம்மது இன்று (26.9.2023) அதிகாலையில் இறந்துவிட்டார் எனும் செய்தி அவர் மகனிடமிருந்து வந்திருந்தது. கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன் பார்த்திருப்பேன். நார்மன் வின்சென்ட் பீலின் ‘நேர்மறைச் சிந்தனைகள்’ எனும் நூல் வாசிக்க வேண்டும் என கேட்டிருந்தார். தனியாக ஓர் அறையில் அமர்ந்திருந்தார். சக்கரை நோயினால் கால் துண்டிக்கப்பட்டதும் அந்த அறையில்தான் பெரும்பாலும் அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். கொஞ்ச நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். ‘அக்கினி வளையங்கள்’ நாவல் வெளியீடு குறித்துப் பேசினார். நான் அந்தப் பேச்சைத் தவிர்க்க நினைத்தேன். அந்த வெளியீடு குறித்து அவருக்குச் சில திட்டங்கள் இருந்தன. நான் எவ்வகையிலும் இணைந்து செயல்பட முடியாத திட்டங்கள் அவை.
Continue readingதமிழ்ச்சீலர் மா.செ.மாயதேவன் அவர்களுக்கு அஞ்சலி

‘தமிழ்ச்சீலர்’ மா.செ.மாயதேவன் அவர்களை நான் முதன்முறையாக 2004இல் சந்தித்தேன். அப்போது நான் ஈப்போ ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயின்று கொண்டிருந்தேன். மூன்று மாத பயிற்றுப்பணிக்காகப் பள்ளிகளைத் தேர்வு செய்யச் சொன்னபோது கல்லூரியைவிட்டு மிக அதிக தொலைவுள்ள மாவட்டமாக விண்ணப்பித்தேன். பொதுவாக விடுதிக்கு எளிதாகத் திரும்பக்கூடிய தொலைவுகளில் உள்ள பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதையே பயிற்சி ஆசிரியர்கள் விரும்புவர். எனக்கு புதிய சூழல் தேவையாக இருந்தது. அதன்படி எனக்கு தைப்பிங் மாநிலத்தில் பயிற்றுப்பணிக்கான இடம் வழங்கப்பட்டது.
Continue readingபோப்பிக்கு அஞ்சலி

போப்பி இன்று இறந்தான். உண்மையில் அதன் அடையாள அட்டையில் பாரதி என்றுதான் பெயரிருக்கும். கனிவும் கம்பீரமும் ஒருங்கே அமைந்த கண்களைக் கொண்டிருந்தான் என்பதால் அப்பெயர் வைத்தேன். ஆனால் போப்பி என்ற பெயர்தான் இயல்பாக ஒட்டிக்கொண்டது. எனவே அவன் தன் பெயர் பாரதியென கடைசி வரை அறிந்திருக்கவில்லை.
Continue readingஅஞ்சலி: கோவை ஞானி

கோவை ஞானி இறந்துவிட்டதாக எழுத்தாளர் அர்வின் குமாரிடமிருந்து தகவல் வந்தபோது இணையத்தில் அதை ஒருதரம் உறுதி செய்துக்கொண்டேன். நீரிழிவு பாதிப்பினால் கண் பார்வை இழந்த நிலையிலும் உதவியாளர்கள் மூலமாக வாசிப்பதையும் எழுதுவதையும் விட்டு விலகாத அவர் தனது 86ஆவது வயதில் அனைத்தையும் முழுமையாக நிறுத்திக்கொண்டுள்ளார் எனத் தோன்றியது.
Continue readingஅக்கினி: அபோதங்களை அணிந்த பறவை
“உன்னைய சின்ன பையனா இளஞ்செல்வன் எங்கிட்ட கைய புடிச்சி ஒப்படைச்சாரு. இப்ப என்னென்னவோ செய்யுற.” அக்கினி சுகுமாறன் – பத்மினி ஆகியோரைச் சந்திக்கும்போதெல்லாம் இந்த வசனங்களைக் நிச்சயமாக சொல்லிவிடுவர்.
அது உண்மைதான்.
பூங்கோதையை யாருக்காவது தெரியுமா?
பூங்கோதை என்பவரை அனேகமானவர்களுக்குத் தெரிந்திருக்காது. நானும் அவரை முதலில் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அழைத்து கலை இலக்கிய விழாவுக்கு வருவதாகச் சொன்னார். அப்படி நிறைய பேர் அழைத்து முன்பதிவு செய்வதுண்டு. மறுநாளும் அவர் அழைப்பு வந்தது. நிகழ்ச்சிக்கு வருவதில் சிக்கல் இருப்பதாகவும் தனது தம்பி சம்மதித்தால் மட்டுமே அவரும் இணைந்து வர முடியும் என்றார். நிகழ்ச்சிக்கு முன்பு அவரது அழைப்புகள் பலமுறை வந்தன. அனைத்துமே தன்னால் வர முடியுமோ முடியாதோ என்ற தவிப்புகள் அடங்கியவை. நான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் இருக்கும்போது அவசியமற்ற அழைப்புகளில் எரிச்சல் அடைவதுண்டு. அழைப்பை எடுக்க தவிர்த்தபோது வட்சப்பில் குரல் பதிவு அனுப்பினார். ‘அன்புள்ள நவீன் சார்’ என தொடங்கியது அந்தக் குரல் பதிவு. தொடர்ந்து அதுபோன்ற பதிவுகள் வந்தன. நிறுத்தி நிதானமாகப் பேசுபவராக இருந்தார். நீளமான குரல் பதிவுகளாக இருந்தன. எனக்கு அதை முழுமையாகக் கேட்பதில் பொறுமை இருக்காது.
ஆதி.இராஜகுமாரன்: நிழலைப் பதுக்கிய கலைஞன்
வல்லினம் நூறு வீடியோ பதிவில் இவ்வாறு சொல்லியிருப்பேன். ‘ஒருவேளை ஆதி.இராஜகுமாரன் இல்லாமல் இருந்திருந்தால் வல்லினம் அச்சு இதழ் தொடர்ந்து வெளிவருவதில் சிரமம் ஏற்பட்டிருக்கும்.’ அவ்வுதவியை அவர் நட்பு கருதி செய்யவில்லை. அடிப்படையில் அவர் தன்னை ஓர் தேர்ந்த இலக்கிய வாசகனாகவே வைத்திருந்தார். எனவே அவ்வாறான முயற்சிகளில் தன்னை இணைத்துக்கொள்வது அவருக்கு உவப்பாக இருந்தது.
