பெற்றோரின் வேலைச் சூழலால், வீட்டில் நாள் முழுவதும் பூட்டி வைக்கப்படும் அன்பு எனும் சிறுவன், தன்னைச் சாமர்த்தியமாக வீட்டிலிருந்து விடுவித்துக்கொண்டதோடு தன் பெற்றோருக்கும் இறக்கைகள் உள்ளன என நினைவுறுத்தி அவர்களையும் பறக்க வைக்கும் படம் ‘பறந்து போ’.
தமிழ் எழுத்துகளைக் கணினியில் உபயோகிக்கும் அனைவருமே அறிந்த சொல் ‘முரசு’. முரசு அஞ்சல் மென்பொருள் பல்வேறு புதிய கூறுகளுடன் மேம்படுத்தப்பட்டு ஜூன் 27 ஆம் திகதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிஏசி (Brickfields Asia College) மண்டபத்தில் மதியம் 3 மணிக்கு வெளியீடு காண்கிறது. இந்நிகழ்ச்சியில் என்னைக் கவர்ந்த அம்சம் ‘உரு’ எனும் நூலின் வெளியீடு. முத்து நெடுமாறனின் வாழ்வைச் சொல்லும் நூல். கோகிலாவின் எழுத்தில் வெளிவருகிறது.
1999இல் பாலச்சந்திரன் அவர்களால் தமிழில் இருந்து மலாய்க்கு மொழியாக்கம் கண்ட ‘Seruling Di Persimpangan’ எனும் தொகுப்பு குறிப்பிடத்தக்க முயற்சி என்றாலும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் எனச் சொல்ல மாட்டேன். கோ. புண்ணியவான், பாவை, மு. அன்புச்செல்வன் போன்றவர்களின் சிறுகதைகள் அதில் இடம்பெற்றிருந்தாலும் சிறுகதைகளின் அடிப்படை கூட அறியாதவர்களின் கதைகளும் அதில் இடம்பெற்றிருக்கின்றன. இக்கதைகள் மலாயா பல்கலைக்கழகம் வெளியிடும் ‘பேரவைக் கதைகள்’ தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. ‘டேவான் பாஹாசா’ வெளியிட்டுள்ளது.
80களுக்குப் பின் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மொழியாக்க முயற்சிகள் முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டன எனக்கூறலாம். இதுவரை மலேசியத் தமிழ் இலக்கியம் சார்ந்து எழுதப்பட்ட ஆய்வு கட்டுரை தொகுப்பு நூல்களிலும் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் குறித்த விரிவான கட்டுரைகள் இல்லை. இராம. சுப்பையா, ஜி. சூசை, விக்னேசன், எஸ். ராமச்சந்திரன், எஸ். சிங்காரவேலு ஆகியோரின் மொழிபெயர்ப்பு பங்களிப்புகள் குறித்த தரவுகளோ தகவல்களோ கிடைப்பதும் மிக அரிதாகவே உள்ளது. நானறிந்து ஜி. சூசை அவர்களின் சில மொழிபெயர்ப்புக் கவிதைகள் 1996இல் மா. இராமையா அவர்களால் எழுதி தொகுக்கப்பட்ட ‘மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியத்தில்’ இடம்பெற்றுள்ளது. அந்நூலில் ஜி. சூசை அவர்களுக்குப் பின்னர் மொழிபெயர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டவர் மலாக்கா ஜோசப் செல்வம் என மா. இராமையா ஒருவரியில் குறிப்பிட்டுச் செல்கிறார். யார் அந்த ஜோசப் செல்வம் எனத் தேடிச் சென்றபோது அவர் ஐந்து நூல்களை மலாய் மொழியிலிருந்து தமிழுக்கும் பாரதியின் பாடல்கள் உட்பட 3 நூல்களைத் தமிழிலிருந்து மலாய் மொழிக்கும் மொழியாக்கம் செய்துள்ளது தெரியவந்தது. 70களில் மலாய் இலக்கியத்துறையில் தீவிரமாக ஈடுபட்டவர். தமிழிலக்கியச் சூழலில் அதிகம் அறியப்படாதவர்.
வல்லினம் இன்று மூன்று மொழி
இலக்கியங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் வழியாக மூன்று
மொழி எழுத்தாளர்களுடனான உரையாடலையும் சாத்தியப்படுத்த முனைகிறது. இது ஒரு தொடக்கம்தான்.
முழுமையான திட்டம் எனக் கூறிவிட முடியாது. மலேசியாவில் ஆங்கில இலக்கியச் சூழலில் மட்டுமே
இயங்கும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் உள்ளனர். சபா, சரவாக்கில் எழுதப்படும் இலக்கியங்கள்
குறித்து தமிழில் நம்மிடையே எந்த அறிமுகமும் இல்லை. இந்த இடைவெளிகளை மெல்ல மெல்ல குறைக்க
வேண்டியுள்ளது. ஆர்வமான இளம் எழுத்தாளர்களின் இணைவின் மூலமாகவே அந்த இலக்கை அடையும்
கால அவகாசத்தைக் குறைக்க முடியும். ஆனால், இது இன்று தொடங்கப்பட்ட முயற்சியல்ல. இப்படி
மூன்று மொழி இலக்கியங்களின் ஒன்றிணைவுக்கு உழைத்த நல்ல முன்னோடிகள் மலேசிய இலக்கியச்
சூழலில் இருக்கவே செய்கின்றனர். 1964 இல் வெளிவந்த ‘புங்கா எமாஸ்’ (தங்க மலர்) எனும்
நூல் அதற்கு மிகச்சிறந்த சான்று.
இன்னும் ஏழு நாட்களில் ‘முக்கோணக்
கதைகள்’ நிகழ்ச்சி. வல்லினத்தின் மற்றுமொரு பெருமுயற்சி. ‘மலேசிய இலக்கியச் சூழலில்
புதிய, வரலாற்றில் நிலைகொள்ளும் முயற்சிகளை வல்லினம் முன்னெடுக்கிறது’ எனும் வாசகம்
கிட்டத்தட்ட தேய்வழக்காகிவிட்டது. மூத்தப் படைப்பாளிகளின் ஆவணப்பட இயக்கம், எழுத்தாளர்களின்
நிழல்படத் தொகுப்பு, எழுத்தாளர்களுக்கு உரிய உரிமத்தொகை வழங்குதல், மூத்தப்படைப்பாளிகளின்
சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தல், நவீன இலக்கியம் சார்ந்த முகாம்கள், விருதுகள்
– நூல் பதிப்புகள் வழி மலேசியாவின் சமகால இலக்கியத்தை உலகத் தமிழ் வாசகர்களிடையே கொண்டு
செல்லும் முயற்சி என வல்லினத்தின் முன்னெடுப்புகள்
அனைத்தும் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் வலுவான தாக்கத்தை உருவாக்கியுள்ளன.
அவர் இறந்து மூன்று வாரங்கள் ஆகின்றன என சற்று முன்னர்தான் தெரிய வந்தது. அவர் இறந்ததை அவர் மனைவியும் அண்ணனுமே இன்றுதான் தெரிந்துகொண்டனர் என்பது மேலும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த மஹாத்மனை மூன்று வாரங்களாக அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் பார்க்க வரவில்லை எனும் உண்மை சங்கடத்தை அளித்தது. நெஞ்சு வலியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் வழியிலேயே இறந்துள்ளார். இறுதி காரியங்கள் மருத்துவமனையிலேயே செய்துமுடிக்கப்பட்டு இஸ்லாமிய முறைபடி அடக்கம் செய்யப்பட்டார் எனக்கூறப்பட்டது.
நேற்று (பிப்ரவரி 1) எனது முதல் மலாய் சிறுகதை தொகுப்பான ‘Pita Suara Mona Fandey’ மாற்று புத்தகக் கண்காட்சியில் வெளியீடு கண்டது. இந்தக் கண்காட்சி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2 வரை சென்ட்ரல் மார்க்கெட்டில் (Central Market) நடைபெறுகிறது.
ஜனவரி 13 ஆம் திகதி அ. ரெங்கசாமியின் மூத்த மகன் சுந்தரத்திடமிருந்து அழைப்பு வந்தபோதே அது ஏதோ துக்கமான செய்தியைத் தாங்கி வருவதாக உள்ளுணர்வு சொன்னது. பெரும்பாலும் துக்கச் செய்திகளைத் தாங்கி வரும் அழைப்புகளுக்கு அத்தகைய தன்மை இருப்பதுண்டு. அவ்வழைப்புகளின் சத்தம் அழுகைபோல ஒலிக்கக்கூடியது.
“அப்பா இறந்துட்டாருய்யா,” சுந்தரம் அண்ணனிடமிருந்து சுரத்தில்லாதச் சொற்கள்.
காலையிலேயே
மேற்கு ஏரிக்குப் புறப்பட்டோம். இதைச் சீனாவின் அழகிய இதயம் எனக் குறிப்பிடுவதால் இதயத்தைக்
காண ஆவலாக இருந்தது. இயற்கை அழகு, கலாசார முக்கியத்துவம், வரலாற்று முக்கியத்துவம் ஆகியவற்றால்
கவனம் பெற்ற ஏரி இது.
அஸ்ரின் அங்குள்ள வாடகை வண்டி பிடிக்கும் செயலியைத் தறவிரக்கம் செய்திருந்ததால் காலை 9 மணிக்கெல்லாம் அவ்விடத்தை அடைந்தோம். காலைக் காற்று புத்துணர்ச்சியைக் கொடுத்தது.