எழுத்தாளர் ம. நவீனின் நான்காவது நாவலான லீகாட் நாவலை ஒரே அமர்வில் வாசித்து முடித்தேன். ஒரு நல்ல புனைவு எப்பொழுதுமே பதில்களை வழங்குவதில்லை. வாழ்க்கை, மனித உளவியல் குறித்து கேள்விகளை எழுப்பும் என்பதை அனுபவமாகவே உணர்ந்திருக்கிறேன். லீகாட் நாவலை வாசித்து முடித்ததுமே தோன்றிய கேள்வி என்பது உடல் மட்டுமே ஆன காமத்தின் எல்லைத்தான் என்ன அதற்கான மீட்புத்தான் என்ன என்பதாக இருந்தது.
Continue readingAuthor: ம. நவீன்
லீகாட்: ஓர் இளம் மனத்தின் இருண்ட பாதையும் தேடலும் – கிருஷ்ணன்
ம. நவீன் எழுதிய ‘லீகாட்’ என்ற உள்ளூர் தமிழ் நாவலை வாசித்து முடித்தேன். இந்நாவல் ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கைக் கதையாக மட்டும் அமைந்துவிடாமல், இளையோர் குற்றச்செயல்கள், சக மாணவர்களின் அழுத்தம், உடல் மற்றும் மனரீதியான வன்முறை, தனிமை, பாலுணர்வு, தாழ்வு மனப்பான்மை, அங்கீகாரத்திற்கான ஏக்கம் போன்ற பல்வேறு உளவியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆழமாகப் பேசுகிறது.
Continue readingலீகாட்: சமூக கருப்பு வெள்ளை இருமை அல்லாத எண்ணற்ற சாம்பல் நிறங்களின் தொகுப்பு – கி. இளம்பூரணன்
தமிழ் நவீன இலக்கியத்தில் இளம்பருவ மனவியல், சமூகக் கட்டமைப்புகள் மற்றும் மனித உறவுகளின் சிக்கல்களை ஆழமாகப் பதிவு செய்யும் படைப்புகள் மிகக் குறைவு. அந்த வகையில், ‘லீகாட்’ நாவல் வெறும் வளரிளம் பருவக் கதையாக இல்லாமல், ஒரு மனிதன் தன்னைத்தானே புரிந்துகொள்ள மேற்கொள்ளும் அகப்பயணத்தின் ஆவணமாக அமைகிறது. குறிப்பாக இடைநிலைப் பள்ளி மாணவன் ஒருவன் தனது விடலைப் பருவத்தில் எதிர்கொள்ளும் உளவியல், சமூக, உடலியல் மற்றும் பண்பாட்டு நெருக்கடிகளை மிகுந்த யதார்த்தத்துடன் பதிவு செய்கிறது.
Continue readingலீகாட்: இரண்டு முரணுணர்வுகளின் வலைப்பின்னல் – சாலினி
இந்த மண்ணில் பிறப்பெடுத்து வாழும் எந்த உயிரும் இந்த உலகில் வாழத் தகுதியுடையதே. ஒருவனின் செயல்களைக் கொண்டு, ஒருவன் வாழத் தகுதியற்றவன் என்று நம்மால் தீர்ப்பளித்துவிட இயலாது. அவ்வாறு இந்த மண்ணில் ஜனனம் கொண்டு, சமூகத்தால் ஒதுக்கப்பட்டவனாகவும், ஒழுக்கமற்றவன் என அழைக்கப்படுபவனாகவும் உருமாறும் ஒருவனின் அகத்தை நெருங்கிப் பார்க்கும் வாய்ப்பை புனைவுகள் நமக்கு அளிக்கின்றன. அவ்வகையில், ‘லீகாட்’ நாவலும் அப்படிப்பட்ட ஓர் ஆணின் அகத்தை, அவன் அகத்தில் தேங்கிக் கொண்டிருக்கும் இருளை, உளவியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
Continue readingநாளை என் பிறந்தநாள்; மேலும்…
நாளை எனக்குப் பிறந்தநாள்.
நாற்பத்து மூன்றாவது வயதின் இறுதி நாளில் நிற்கிறேன். இந்நாளில் நண்பர்களுடன் இணைந்து ‘வல்லினம் அறவாரியம்’ தொடங்கும் செய்தியைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
இந்த முயற்சியை முன்னெடுக்க முதன்மையான உந்துசக்தி திரு அருண் மகிழ்நன் அவர்கள். மே 24ஆம் திகதி அவருடனான சந்திப்பில் இது காலத்தின் தேவையெனப் புரிந்தது. திட்டம் வகுப்பது மட்டுமல்லாமல், அத்திட்டம் முழுமையடைய தமது ஆதரவை அருண் மகிழ்நன் அவர்கள் உணர்த்தியபோது எனக்கு இம்முயற்சி குறித்த ஆழமான நம்பிக்கை பிறந்தது.
Continue readingகடிதங்கள் (அற்புதம்)
அற்புதம் என்றே தலைப்பு வைத்துவிட்டதால், வேறு எதுவும் சொல்லமுடியாது 😁 புனைவு எழுத்தாளரை அமெரிக்கா அழைத்துவந்தால் இப்படித்தான் நம்மையே பாத்திரங்களாக மாற்றி அழகு பார்ப்பார்கள் போலும். மானுடத்தின் சிறப்பைச் சொல்லும் இக்கதை அற்புதம்!
சௌந்தர், ஆஸ்டின்
Continue readingகடிதங்கள் (கொயோட்டி)
கொயோட்டி கதை அருமை. நாங்கள் வசித்த குடியிருப்புப் பகுதியில் ஸ்கங்க் மற்றும் ரக்கூன் நடமாட்டம் எப்போதும் உண்டு. வீட்டின் அருகே இருந்த மலையின் பெயரே கொயோட்டே ஹில்ஸ் தான். அடுத்தவர் பசிக்கு உணவிட்ட பழகிய தாய் மனதிற்கு அமெரிக்க வாழ்க்கை ஒரு பெரும் தடைச்சுவரென எழுந்து நிற்பதும், அதை மீறி கொயோடேவிற்கும் உணவிட்டு அன்னையென எழுந்து நிற்பதும் நெகிழ வைக்கிறது.
சாரதா
Continue readingசிறுகதை: கொயோட்டி
சான் ஓசே நகருக்குள் அம்மா வலது காலை எடுத்து வைத்தது முதலே மாலதியின் முணுமுணுப்புத் தொடங்கிவிட்டது. மூன்றாவது நாள், அது முழு வாக்கியமாக உருகொண்டது.
“அவ்ளோ பாசம் இருந்தா ஒரு மாசம் லீவு போட்டுட்டு ஒங்க அம்மாவுக்கு பாதுகாப்பா சென்னைக்கே போக வேண்டியதுதான,” என்றாள். அவள் தொலைவாகச் சென்றபிறகு ‘லீவு கெடைச்சா போவ மாட்டனா’ என எனக்குள் கூறி ஆறுதல் தேடிக்கொண்டேன்.
Continue readingசிறுகதை: அற்புதம்
மூன்றாவது அடுக்குமாடி குடியிருப்பில் ஏறி கெய்லா குறித்து விசாரித்தபோது கால்களில் தளர்விருந்தது. அவள் ஐந்தாவது மாடியில்தான் வசிக்கிறாள் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். காற்றில் குளிர் அதிகரித்திருந்ததால் கைகளை குளிராடை பாக்கெட்டில் விட்டுக்கொண்டேன். நெடுநேரமாக நான் அவளைத் தேடி வந்த காரணத்தை ஒரு வயதான மூதாட்டியிடம் விளக்க முயன்றுக்கொண்டிருந்தேன். அவளுக்குக் காது மந்தம் என அறிந்தபோது கொஞ்சம் சத்தமாகப் பேச வேண்டியிருந்தது. என் குரல் கேட்டு உள்ளே இருந்து என்னை வினோதமாகப் பார்த்த கண்களுக்குரியவன் வாட்டச்சாட்டமான இளைஞன் எனத் தெரிந்தபோது அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றேன். சொல்லப்போனால் முயற்சியிலிருந்து விடுபட்டு ஆஸ்டினை விட்டே புறப்பட்டுவிட தீர்மானித்தேன்.
Continue readingஅஞ்சலி: சீ. முத்துசாமி வேண்டிய தனிமை
சீ. முத்துசாமி எனும் எழுத்தாளரை நான் முதன்முறையாக சந்தித்தது 2005இல் நடைபெற்ற ஆஸ்ட்ரோ நாவல் போட்டியின் பரிசளிப்பு விழாவில்தான். அவர் எழுதிய ‘மண்புழுக்கள்’ நாவலுக்கு முதல் பரிசும் நான் எழுதிய ‘ஞானத்தின் வாசலிலே’ எனும் நாவலுக்கு இரண்டாவது பரிசும் கிடைத்தது அந்தப் போட்டியில்தான். பரிசளிப்புக்கு முன்பே தனியாக நின்றுக்கொண்டிருந்த அவரிடம் சென்று என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன். எவ்வித ஆர்வமும் இல்லாமல் பேசினார். பதில்கள் எல்லாம் ஏசுவதுபோலவே வெடுக்கென இருந்தன. அப்போது என்னை இலக்கியச் சூழலில் பலருக்கும் தெரியாது. நான் ‘நயனம்’, ‘மன்னன்’ போன்ற வெகுசன இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தேன். எனக்கென தனி வாசகர் பட்டாளம் இருந்தது. முத்துசாமி அந்த வெகுசன இலக்கியச் சூழலுக்கு அந்நியமானவர். வெகுசன இதழ்களில் எழுதுவோரைப் பொருட்டாகக் கருதாதவர்.
Continue reading









