தாரா: காழ்ப்புணர்ச்சியின் யுத்தம் – கோ. புண்ணியவான்

படைப்பிலக்கிய வடிவங்களில் நாவல் வாசிப்பது நல்ல அனுபவம். சிறுகதைகள் போலல்லாமல் வாசகனைத் தொடர்ச்சியாக சிலபல நாட்களுக்கு தன்னுடன் பயணம் செய்யவைத்து அதன் தட்ப வெப்பச் சூழலோடு நம்மையும் பிணைத்து பரவசமூட்டக்கூடிய இலக்கியப் புனைவு நாவல். அதிலும் வாசகன் அறியா ஒரு கதைக்களத்தையும், கதை மனிதர்களையும், நில அமைப்பையும் அறிமுகம் செய்து அவனுக்குள் புதிய அனுபவத்தை ஏற்றி அறிவார்ந்த சூழலுக்குள்ளேயே அவனை வைத்துக்கொள்வது நாவல் எழுத்தின் பயனாகும். நாவல் நெடுக புனைவுத்தர்க்க எல்லைக்குள் இயங்கவைத்து, வாசித்து முடித்த பின்னரும் அதன் இயங்கு விசையை வாசகனிடம் கடத்தி பாதிப்படையச் செய்யும் நாவல் சிறந்த படைபென்பேன். ‘தாரா’ அதனை செவ்வனே செய்திருக்கிறாள்.

Continue reading

வாசுகி டீச்சர் (விரிவாக்கப்பட்டது)

எனது ‘தாரா’ நாவல் வெளியீடு குறித்த அறிவிப்பு வந்த நாள் முதலே நண்பர்கள் பலரும் என் நாவலை வெளியீடு செய்யப்போகும் அந்த வாசுகி டீச்சர் யார் எனக்கேட்டனர். இலக்கியச் சூழலில் அறிமுகமில்லாத அவர் யாராக இருக்கும் என்பதை அறிய பலருக்கும் ஆர்வமும் குழப்பமும் இருந்தது. அவர் என் இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர் என்றேன் சுருக்கமாக. ஆனால் அவர் அது மட்டுமல்ல. என்னை ஓர் எழுத்தாளன் என முதன் முறையாகக் கண்டுப்பிடித்து என்னிடம் சொன்னவர் வாசுகி டீச்சர்தான்.

Continue reading

தாரா: கால்களும் இறக்கைகளும் கொண்ட கதை – சாலினி

நல்ல நாவல்கள் விசாலமான வாழ்க்கையைச் சொல்வதாகவே அமைகின்றன. அந்த வாழ்க்கையின் ஊடே நுழைந்து பெறக்கூடிய நிகர் அனுபவங்களே நாவல் வாசிப்பு கொடுக்கும் இன்பமாகிறது. ம.நவீனின் ‘தாரா’ அப்படியான ஒரு நாவல்தான். அவரது முந்தைய நாவல்களைப் போலவே யதார்த்த வாழ்க்கையோடு மிகுபுனைவும் கலந்த நாவல் இது. ஒரு புறம் தரையில் கால்களை ஊன்றி நடக்கும் மனிதன் இறக்கைகளையும் அசைத்துக் கொண்டிருப்பதுபோல மெய்யான வாழ்க்கையினூடே நாம் அறியாத இன்னொரு மெய்யும் இணையும் புனைவு ‘தாரா’.

Continue reading

யுவன் சந்திரசேகர்: சோழிகளை விசிறும் புனைவுக்கலைஞன்

மேஜிக் தாத்தாவை நான் பயின்ற தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பலருக்கும் தெரியும். என் நண்பனை என்றாவது ஒருநாள் பள்ளிக்குக் காரில் அழைத்து வருபவர். அது சிவப்பு நிறக் கார். பெரும்பாலான ஆசிரியர்களே மோட்டார் சைக்கிளில் வந்த காலத்தில் பளிச்சிடும் அந்தச் சிவப்பு நிறக் காரின் மீதும் முழுமையாக நரையேறிய மேஜிக் தாத்தா மீதும் எங்களுக்குப் பெரிதும் ஈர்ப்பிருந்தது. தாத்தா பள்ளிக்கு வந்தால் எங்கள் பள்ளியுடன் ஒட்டியுள்ள மாரியம்மன் கோயிலின் முற்றத்தில் அமர்ந்துகொள்வார். நாங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு மேஜிக் செய்யும்படி கெஞ்சுவோம்.

Continue reading

ஆழம்: தோண்டப்படாத மணற்கேணி

மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் வேர்விடத் தொடங்கிய 70ஆம் ஆண்டுகளில் அதன் சாதனை முனையாக உருவானவை சீ. முத்துசாமியின் சிறுகதைகள். தோட்டப்புற வாழ்க்கையின் புற அழுத்தங்களோடும் அன்றாட அவலங்களோடும் எழுதப்பட்டுக் கொண்டிருந்த மலேசிய சிறுகதைகளுக்கு மத்தியில் அப்பாட்டாளிகளிடம் உள்ள அந்தரங்கமான யதார்த்தத்தை நுண்மையாக முன்வைத்த முதன்மையான படைப்பாளி அவர். அகவயமான பயணத்தின் வழி மனதின் இருண்மையை இடைவிடாது வரைந்து காட்டியவர். 90களுக்குப் பின்னர் அவரது மறுபிரவேசம் மலேசிய நவீன தமிழ் இலக்கிய உலகின் முன்னோடிகளில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியது.

Continue reading

தாரா நாவல் வாசிப்பனுபவம் 1 – அரவின் குமார்

தாரா நாவலை வாசித்து முடித்ததும் எனக்குள் தோன்றிய முதல் கேள்வி நாவல் என்பது தருக்கத்தால் மட்டுமே ஆனதா என்பதுதான். அந்தக் கேள்வியை நாவலென்னும் கலை வடிவத்தில் தருக்கத்தின் பயன் என்னவாக இருக்கிறது என்பதாகவும் தொகுத்துக் கொள்ள முடியும்.

Continue reading

தாராவைச் சந்தித்த கதை

ஒரு புனைவை எழுதிக்கொண்டிருக்கும்போது சந்திக்கும் அனுபவங்கள் எல்லாம் அந்தப் புனைவு தன்னை முழுமையாக்கிக்கொள்ள உருவாக்கித்தரும் வாய்ப்புகளோ என பல சமயம் எனக்குத் தோன்றுவதுண்டு. சரியாகச் சொல்வதென்றால் ‘பேய்ச்சி’க்குப் பிறகு எனக்குள் இவ்வெண்ணம் வலுவாகவே வேரூன்றியுள்ளது. இதை நான் மற்றவர்களிடம் சொல்லும்போது அதை மூடநம்பிக்கையாகவும் தற்செயல்களாகவும் சொல்லிக்கடப்பர். என்னால் அப்படி எடுத்துக்கொள்ள முடிவதில்லை.

Continue reading

கு. அழகிரிசாமியின் குழந்தைகள் (உரை)

அனைவருக்கும் வணக்கம்.

2005இல் நான் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தேன். தமிழ் மொழி ஆசிரியர் நான். பொதுவாகவே புதிதாகப் பணியில் அமரும் ஆசிரியர்களைப் படிநிலை ஒன்றில் பயிற்றுவிக்கப் பணிப்பது மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் வழக்கம். அப்படி எனக்கு இரண்டாம் ஆண்டில் தமிழ் மொழி பயிற்றுவிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான் சற்றுக் கண்டிப்பான ஆசிரியர்தான். மாணவர்கள் மொழியைச் சரியாகக் கையாள வேண்டும் என்பதில் பிடிவாதமாகவே இருந்தேன்.

Continue reading

பவா செல்லதுரையும் கூல் சுரேஷும்

‘பிக் பாஸில்’ பவா செல்லதுரை அவர்கள் கலந்துகொண்டபோது நான் என் முகநூலில் ஒரு பதிவு இட்டிருந்தேன். சினிமாவுடன் சம்பந்தப்பட்ட கூல் சுரேஷ் ‘பிக் பாஸ்’ செல்லும்போது யாருக்கும் தவறாகப் படவில்லை; இலக்கிய உலகில் அந்த இடத்தை வகிக்கும் பவா செல்லதுரை செல்வதில் என்ன தவறு எனக் கேட்டிருந்தேன். இதை நக்கலாகவெல்லாம் கேட்கவில்லை. என் மனதில் பவா செல்லதுரை அதற்கான இடத்தில் மட்டுமே அமர்ந்துள்ளார்.

Continue reading

சை.பீர்முகம்மதுவுக்கு அஞ்சலி

சை.பீர்முகம்மது இன்று (26.9.2023) அதிகாலையில் இறந்துவிட்டார் எனும் செய்தி அவர் மகனிடமிருந்து வந்திருந்தது. கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன் பார்த்திருப்பேன். நார்மன் வின்சென்ட் பீலின் ‘நேர்மறைச் சிந்தனைகள்’ எனும் நூல் வாசிக்க வேண்டும் என கேட்டிருந்தார். தனியாக ஓர் அறையில் அமர்ந்திருந்தார். சக்கரை நோயினால் கால் துண்டிக்கப்பட்டதும் அந்த அறையில்தான் பெரும்பாலும் அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். கொஞ்ச நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். ‘அக்கினி வளையங்கள்’ நாவல் வெளியீடு குறித்துப் பேசினார். நான் அந்தப் பேச்சைத் தவிர்க்க நினைத்தேன். அந்த வெளியீடு குறித்து அவருக்குச் சில திட்டங்கள் இருந்தன. நான் எவ்வகையிலும் இணைந்து செயல்பட முடியாத திட்டங்கள் அவை.

Continue reading