
வனவிலகுங்களோ, வளர்ப்பு விலங்குகளோ, தங்கள் எல்லைகளை வகுப்பதை ஒரு மூர்க்கமான கலையாக தங்கள் மரபணுவில் கொண்டுள்ளது, நம் தெருவில் வாலாட்டிக்கிடக்கும் ‘சாந்தமான’ என நாம் பெயரிட்ட நாய் கூட, தன் குழுவில் இல்லாத நாயை தன் எல்லைக்குள் அனுமதிப்பதில்லை. கூர் பற்களைக்காட்டி வெறியுடன் மாற்றானை துரத்துவதும் மாற்றான் பின்னங்கால்களுக்கு நடுவே வாலை சுருட்டியபடி பயந்து ஓடுவதும் நாம் அன்றாடம் காணும் காட்சி. மனிதனோ வேறு சில கொடுக்கல் வாங்கல்களில் மூலமாக இந்த மூர்க்கக்கலையை, சமூகம் எனும் சட்டகத்திற்குள் வைத்து, நெறி படுத்திய பின்னரும், பூமி முழுவதும் அவனுடைய ‘மூர்க்கக்கலை ‘ வெளிப்பட்ட வண்ணமே இருக்கிறது.