கீலாக்காரன் (சிறுகதை)

“இங்கேருந்து ஓடிப் போயிடு!”என்றேன் ரகசியமாக. அதைச் சொல்லும் தைரியம் எனக்கு எப்படி வந்ததெனத் தெரியவில்லை. யாரும் வருகிறார்களா எனச் சுற்றி முற்றி பார்த்துக்கொண்டேன்.

சீத்தாராமன் நான் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாததைப்போல கனிவுடன் பார்த்தார்.

Continue reading

மிருகம்: கடிதங்கள் 5

தீவிர இலக்கிய செயல்பாடுகள், முகாம்கள், இலக்கிய பத்திரிக்கை நடத்துதல்,  இலக்கிய விழாக்களுக்கு நாடு விட்டு நாடு பயணித்தல், போட்டிகள், நடுவர் வேலை, பரிசளித்தல், நாவல்கள், விமர்சனம், கட்டுரை, புத்தக வெளியீடு, இலக்கிய அமர்வுகள் இவை யாவற்றுக்கும் நடுவில் நேரம் அமைத்து சிறுகதை எழுதுகின்ற ம.நவீன் அவர்களுக்கு முதலில் பெரிய சலாம்.

Continue reading

மிருகம்: கடிதங்கள் 4

‘மிருகம்’ படித்தேன். மனிதநேயம் அருகிவரும் காலத்தில் மெருகேற்றிய மிருகநேயம் பற்றி சொல்லப்பட்ட கதை.
மனங்களின் முரண்களை பற்றிய அழகான எதார்த்தமான சித்தரிப்பு.
முடிவு மனதை உண்மையலேயே தொட்டது.

Continue reading

மிருகம்: கடிதங்கள் 3

ம. நவீன் சார் அவர்களுக்கு,

‘மிருகம்’ சிறுகதையைப் படித்து முடிக்கும் பொழுது இடதுபுற கண்களில் கொஞ்சமாய் துளிக் கண்ணீர் தேங்கியிருந்ததைத் துடைத்துக் கொண்டேன். மிக மிகக் கொஞ்சமாய் தேங்கியிருந்தது.

Continue reading

மிருகம்: கடிதங்கள் 2

மிருகம்

கச்சிதமாக எழுதப்பட்டுள்ள கதை. நவீனின் சிறந்த கதைகளில் ஒன்று.

மனித உணர்வுகள், அதன் ஆதி குணத்தைத் தீண்டும்போது, தான், தனது என்றே நினைக்கிறது. பாசாங்குகள் அறுபட்டுப் போகின்றன.
ஆதி குணத்திலேயே பாசாங்கற்று வாழும் மிருங்களின் தூய அன்பும் வேதனையும் தற்காப்பும் குற்றவுணர்வும் சமரசமற்றதாக உள்ளன. அவை சமாதானங்களைக் கோருவதில்லை. வினைக்கான எதிர்வினைகளை கேள்விகளற்று ஏற்றுக்கொள்கின்றன.

Continue reading

மிருகம்: கடிதங்கள் 1

சிறுகதை மிருகம்

அன்பு நவீன். நான் உங்களின் வாசகனென தைரியமாகச் சொல்லிக்கொள்ள தகுதி படைத்துள்ளதாகவே நம்புகிறேன். உங்களின் அத்தனை சிறுகதைகளையும் வாசித்துவிட்டேன் எனும் துணிவில் இதைச் சொல்வேன். (மண்டை ஓடியை மறுபதிப்பு போட்டால் என்ன?)

Continue reading

சிறுகதைகளின் ஆன்மாவை அறிதல்- 2

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

கடந்தவாரம் இந்த நிகழ்ச்சியில் ஆற்றிய உரையை எனது தளத்தில் பதிவேற்றியப் பிறகு வாசகர்களிடமிருந்தும் சக நண்பர்களிடமிருந்தும் பல்வேறுவகையான கேள்விகளை எதிர்க்கொண்டேன். அதில் முதன்மையான கேள்வி ‘ஏன் இந்த அங்கத்திற்குச் சிறுகதைகளின் ஆன்மாவை அறிதல் எனத் தலைப்பிட்டிருக்கிறீர்கள்? சிறுகதையின் நுட்பங்களை அறிதல் என்றுதானே சொல்ல வேண்டும்’ என்பதாக இருந்தது.

Continue reading

சிறுகதைகளின் ஆன்மாவை அறிதல்

அனைவருக்கும் வணக்கம். க்யோரா.

2021இல் சிறுகதை ஓர் எளிய அறிமுகம் எனும் தலைப்பில் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் பட்டறை ஒன்றை வழிநடத்தினேன். நண்பர் மெய்யப்பன் அவர்கள் மூலமாக அப்படி ஒரு முயற்சி சாத்தியமானது. எந்த ஒரு முயற்சிக்கும் தொடர்ச்சியான முன்னெடுப்புகள் இல்லை என்றால் அவை சடங்குகளாக ஓரிடத்தில் தேங்கி விடுவதைப் பார்த்திருக்கிறேன். அவ்வகையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி ஒரு முன்னெடுப்பை அவர் மீண்டும் கையிலெடுத்திருப்பதை ஆரோக்கியமான நகர்ச்சியாகக் கருதுகிறேன். அவருக்கும் அவரது குழுவினருக்கும் மற்றும் இங்கு இணைந்துள்ள நண்பர்களுக்கும் என் வணக்கத்தையும் அன்பையும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

Continue reading

மேன்மையின் பிரதிநிதி அந்தரா – ஜெயராம்

அன்புள்ள நவீன்,

ஜெயராம்

உங்களது ‘தாரா’ நாவலை வாசித்தேன். அண்மையில் என்னை தொந்தரவு செய்த  படைப்பு தாரா. மலேசியாவில் பூழியனின் தலைமையில் வேலைக்கு வந்து அங்கேயே வேர்விட்ட தமிழ் வம்சாவளியினருக்கும் மிக அண்மையில் வேலைக்காக குடிபெயர்ந்த நேபாள நாட்டவர்களுக்கும் இடையில் நடக்கும் உரசல்களினூடாக நாவல் சொல்லப்பட்டிருந்தாலும் தங்கி வாழ எப்போதும் மனிதர்களுக்கிடையில் அல்லது மனித கூட்டங்களுக்கு இடையில் நடக்கும் பூசல்களில் உள்ள பல பரிணாமங்களை நாவல் தொட்டு செல்கிறதாக வாசிக்க முடிந்தது.

Continue reading

சண்முகப்பிரியா கடிதங்கள் -2

சண்முகப்பிரியா சிறுகதை

The short story “Shanmugapriya” by M. Navin revolves around the storyteller’s memories of a person named Shanmugapriya, whom they met during their school years at Wellesley Tamil School. The author reflects on how he had forgotten about Shanmugapriya until a visit to the beach with his three-year-old daughter triggered a memory of her.

Continue reading