Author: இரட்ணேஸ்வரன் சுயாந்தன்

கவிஞனுக்கான சினிமா

தலைசிறந்த ஒரு கவிஞனைப்பற்றிய முழுநீளப் படம் எடுத்தல் என்பது சில இலக்கிய நியதிகளுக்கும், கவிதைசார்ந்த உள்வாங்கலுக்கும் உட்பட்டே அமைதல் வேண்டும் என்பது பலரது கருத்தாகும். (தீவிர இலக்கியவாதிகள்) குறிப்பிட்ட ஒரு கவிஞரைப் பற்றிய பட ஆக்கங்களில் அவர்தம் வாழ்க்கை வரலாறு என்பது தவிர்க்க முடியாத, அதேநேரம் அவரது படைப்புக்களை திரையில் எவ்விதத்தில் பிரயோகிப்பது என்ற விவாதம்…

பிரமிளின் ஒரு கவிதை: சிற்றாய்வு

“இன்றைய தமிழ்க்கவிதையின் முன்னோடி பிரமிள் தான். தத்துவச் சிக்கல்களைத் தீர்த்துக்கொண்டு, மரபையும், நவீனத்துவத்தையும் செரித்து முன்னோக்கிப் பாய்ந்தவர் பிரமிள்” என்று தேவதேவன் ஒரு நேர்காணலில் பிரமிள் பற்றிக் கூறியிருந்தார். அவரது கூற்று நியாயமானது என்று பிரமிளின் படைப்புலகமே பறைசாற்றும். பிரமிள் பற்றிய முன்னுரைகள் இல்லாமலே அவரது கவிதை மீதான சிற்றாய்வைப் பரிசோதித்து விடலாம். காவியம் என்ற…