Author: பெருந்தேவி

அப்பாவுக்குச் சென்னை பிடிக்கவில்லை

அலுவலகம் முடிந்த பின் எல்டாம்ஸ் ரோட்டிலும் நுங்கம்பாக்கம் ஹைவே டிராஃபிக்கிலும் முக்கால் மணிநேரம் லோல்பட்டு, இதற்கு நடுவில் ஒன்வேயில் மேலே ஏறிவந்த ஒரு பைக்காரனைத் திட்டிவிட்டு ஒருவழியாக அண்ணாநகர் வந்துசேரும்போது ஏற்கெனவே ஆறு முப்பது ஆகியிருந்தது. குறுகலான மாடிப்படியில் ஏறினால் குளிரூட்டப்பட்ட ஹால். சிவில் சர்வீஸஸ் மெயின் தேர்வுக்கான கோச்சிங் வகுப்பில் சேர்ந்திருந்தேன். வரலாறு வகுப்பு.…

பெருந்தேவி கவிதைகள்

சில நாட்கள் இது நடக்கும் அதிகாலையிலிருந்தே அந்த நாள் உனக்கெதிராகச் சதி செய்வதாக ஒவ்வொரு நிமிடமும் உன்னை முறைத்துவிட்டு நகர்வதாக ஒவ்வொரு பார்வையும் உன் கழுத்தை நெரிக்கப்போவதாக உன் கைகளும் கால்களுமே உனக்கெதிரான சதியில் சேர்ந்துவிட்டதாக உன் நகங்கள் திடீரெனப் பெரிதாகி உன்னைக் கீறி ரத்த விளாறாக்கிவிடும் போல உன் கைகளை ஒன்றோடொன்று இறுக்கமாகக் கோர்த்தபடி…