
கட்டிலில் பாதி அளவே இருந்தாள். சுருக்கங்களை நீவி விட்டால் நீண்டு விடுவாளோ என்று தோன்றியது. ”நல்லாக்றீங்களா?” என்றதற்கு, எங்கோ பார்த்து ”ஆங் நல்லத்தான இருக்குறேன் போ” என்று சிரித்தாள். பொன்னாத்தா கிழவிக்கு வயது தொன்னூற்று ஒன்று. நடமாடிக்கொண்டுதான் இருக்கிறாள். அம்மா என்னிடம் கூறிய கணக்குப் படி பார்த்தால் எந்தத் தடையமும் தெரியவில்லை. நான் ஊருக்கு வந்து…
