Author: பிரபு. ஆ. (முனைவர்)

சங்ககாலச் சிற்றூர் மக்களின் நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும்

தமிழக மக்கள் தம் அன்றாட வாழ்வினில் பல்வேறு நம்பிக்கைகளையும் சடங்குகளையும் கடைபிடித்துவருவது கண்கூடு. இவ்வாறான செயல்கள் கண்மூடித்தனமான மூடப்பழக்கங்கள் என்று வாதிடுவது ஒருபுறம் இருந்தாலும்; நம்பிக்கைகளும் சடங்குகளும் தற்செயலாக ஒருவருக்கு ஏற்படும் இன்பதுன்ப நிகழ்வுகளைக் காரணகாரியத்துடன் பொருத்தி, அது மற்றவர்க்குப் பாடமாக அறிவுறுத்தப்படுவது என்றே நாம் கருதவேண்டியுள்ளது. இந்நடவடிக்கைகள் உளவியல் சார்ந்த செயலாகவும் அமைகின்றன. அதாவது…