
பறக்க எத்தனிக்கும் பறவை ஒன்றினை வரைகிறாள் மாயா. நீல நிற பறவை அது. கண்களில் கானகத்தைச் சுமந்தபடி சிறகுகளை விரித்துக் காத்திருக்கிறது. தானியங்களையும் தடாகம் ஒன்றினையும் மரங்களையும் வரைந்து முடித்த அவள் களைத்துப் போய் உறங்கி விட்டாள். தான் பறந்து திரிய ஒரேயொரு வானத்தை வரைந்து விடு என காதருகில் வந்து கெஞ்சி எழுப்புகிறது அந்நீல…