Author: லஷ்மி சரவணகுமார்

பிங்கி

கடலின் பேரோசை வெளியெங்கும் நிறைந்துகிடக்க இன்னுமவள் மணலோடுதான் புரண்டு கொண்டிருக்கிறாள். அவளுடலெங்கும் மணல் திட்டுத்திட்டாய் ஓவியம் தீட்டியிருந்தது. மூடியிருந்த கண்களுக்குள் அசையும் அவளின் கருவிழிகளைப் பார்த்தபடியே கையிலிருந்த பியரை மகி குடித்துக் கொண்டிருந்தான். அந்தக் கருவிழிகளின் அலைச்சல் பல்லாயிரம் கிலோமீட்டர் தள்ளியிருக்கும் தன் சொந்தநிலத்தைத் தேடும் தவிப்பின் வெக்கையாக இருக்கலாம். மதுவருந்தியிருக்கும் அவளின் நாசியிலிருந்து நீண்ட…