நிழலின் சொகுசு

shadow-new

பிரதான சாலையோடு சங்கமிக்கும் தடம்

வழியே வரும் சொகுசுக் கார்
முனையில் நின்று
மூக்கு நீட்டி எட்டிப் பார்க்கும்

தூர்தர்ஷனின் மகாபாரத வில்
தொடுத்த கணைச் சரங்களாய்
விசையுற்று ஏகும் வாகனங்கள்

ஒருகண சிறுவெளி கிடைத்ததும்
அதில் உடம்பை நுழைத்து
வெறிவேக வேங்கைகள் ஸ்தம்பிக்க
ஒய்யாரமாய் வளைத்து
சல்லென்று முந்திச் செல்லும் நரியின் மீது
உறுமும் விழிகளின்  உஷ்ணம் குவிகையில்

சொகுசுக் காரின் நிழலோடு ஒண்டிக்கொண்டு
சௌகரியமாய் சாலையில் கலந்திருக்கும்
என் பைக்.

1 comment for “நிழலின் சொகுசு

  1. வாசுதேவன்
    April 1, 2015 at 10:11 pm

    சொகுசுக் காரின் நிழலோடு ஒண்டிக்கொண்டு
    சௌகரியமாய் சாலையில் கலந்திருக்கும்…..அழகு !!!

Leave a Reply to வாசுதேவன் Cancel reply