மூன்றாவது மாடியிலிருக்கும் என் பணிமனையின் அகண்ட சாளரக்கண்ணாடி வழியாகத் தென்படும் ஒரு மரத்தின் முகடு உச்சி முகரும் உயரத்தில் தலைகாட்டி நின்றிருக்கும் வாஞ்சையோடு அரூபக் கரங்கள் அந்தரங்கமாயத் தீண்ட நிரவமாய் அது குலுங்கிச் சிரிக்கும் விஸ்தாரமாய்க் கவைத்த கொம்புகள் அந்தரத்தில் எம்பிக் குதிக்கையில் பதின்மக் கிளைகளில் ஊஞ்சலாடும் பால்ய நினைவுகள் சின்னஞ்சிறு இலைகள்மீது ஒருதுளி வெயில் ஒளிரும் மாய விரல்கள்…
Author: ராஜா. எம்.
பூசாரி அம்மத்தா
காணாக்கிளைப் பறவை அனுப்பும் குரல் உரசி இலை உதிர்க்கும் ஒலியோடு ஜோடியாக வெயில்மணம் பூசிப் பைய வரும் மதியக் காற்றின் முதுகில் தொற்றிக்கொண்டு வந்திறங்கும் அம்மத்தாவின் வீட்டு வாசலில் மகனைப் பிரிந்து தொலைவூர் சொந்தவீட்டில் தனியாகவே வாழும் அம்மத்தா முதுமை தேய்த்த கால்மூட்டுக்கு உள்ளங்கையை ஊன்றக் குடுத்து சாய்த்தவாறே அம்பலம் சுற்றி அஞ்சு முழுத்திங்கள் கண்டுவிட்ட…
நிழலின் சொகுசு

பிரதான சாலையோடு சங்கமிக்கும் தடம் வழியே வரும் சொகுசுக் கார் முனையில் நின்று மூக்கு நீட்டி எட்டிப் பார்க்கும் தூர்தர்ஷனின் மகாபாரத வில் தொடுத்த கணைச் சரங்களாய் விசையுற்று ஏகும் வாகனங்கள் ஒருகண சிறுவெளி கிடைத்ததும் அதில் உடம்பை நுழைத்து வெறிவேக வேங்கைகள் ஸ்தம்பிக்க ஒய்யாரமாய் வளைத்து சல்லென்று முந்திச் செல்லும் நரியின் மீது உறுமும்…
எம். ராஜா கவிதைகள்
கருப்பு நிறத்திற்குக் காக்கையின் குரல் இமைகள் மூடினால் இருளின் ஆழம் ஆழத்து நிறத்தில் தலை சாய்த்து விழி உருட்டி உறுத்தும் உருவம் ஒன்று ரெண்டாகி ரெண்டு மூன்றாகி காவெனக் கரையும் o க்கா க்கா தெருச் சாலை எதிர்க் கரையில் சிறகு மறந்து தரையில் நிற்கும் கரிய உருவம் இளஞ் சிவப்பு அடித் தொண்டை தெரியக்…
ஓரிலையும் அசையாத மரத்தினடியில் – ஒரு திறனாய்வு
ஓரிலையும் அசையாத மரத்தினடியில் அமர்ந்தபடி, கவிஞர் ராஜா எழுதிய அல்லது எழுதியவற்றுள் 102 கவிதைகள், ஓர் தொகுப்பாக, உயிர்மை பதிப்பகத்தின் மூலம் வெளியாகியுள்ளது. எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்; தலைப்பிலிருந்தே துவங்கலாம். ஓரிலையும் அசையாத மரம் – காற்றே இல்லையென்றால் சாத்தியம். எங்கிருக்கிறது அது? ஒருவேளை மரச்சிலையோ? என்ன சொல்ல வருகிறார்? கவிராயருக்கே வெளிச்சம். இன்னும்…
எம்.ராஜா கவிதைகள்
அப்புக்குட்டியும் குட்டித்தங்கமும் புதுமணத் தம்பதி கதை தலைமுனை இழுத்தால் காலைக் கடிக்கிறது. காலைக் காப்பாற்றினால் கடிபடுது என்காது. கொசுக்கள் களவாடிய தூக்கம் தொலைந்துபோன நடுநிசியில் குட்டைப்போர்வையை சுருட்டியெறிந்து சுறுசுறுப்பாய் உட்கார்ந்தபடி புதுமணத் தம்பதிபற்றி சுடச்சுடக் கதைசொல்கிறேன். கவனமாய்க் கேளுங்கள் கனவான்களே கனவாட்டிகளே! கடவுள் வாழ்த்து வீதிநடுவே கொலு வைத்தார்களா கோவிலில் வைத்தபின்னே சுற்றிலும் வீதிசமைத்தார்களா எனக்…
புறப்பாட்டின் துயரப்பாடு
பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டது பணியிடத்தில் விடுப்பு சொல்லியாகிவிட்டது துணிமணி இத்யாதிகளையும் எடுத்துவைத்தாயிற்று புறப்படும் பொழுதில் எந்த முகாந்தரமுமின்றி மனதைப் பிசைகிறது ஒருசோகம் ஒரு பிரயாணத்திற்குத் தயாராகிப் புறப்படும் வேளைகளில் பெருஞ்சோகச்சுமை நெஞ்சை அழுத்துகிறது புறப்படும் ஊர் சொந்த ஊராகவே இருந்ததில்லை பெரும்பாலும் சேரும் ஊர்கூட தூரதேசப் பிரதேசத்தில் இல்லை இரவு கிளம்பினால் விடியலில் அடைந்துவிடும்…
கோடைகால மதியப் பொழுதுகள்
மதியம் உறங்கி எழுந்தால் பெரும்பாரத்தொடு மனம் கனத்துவிடுகிறது. விடுமுறை நாளில் வெறிச்சோடி நீண்டுகிடக்கிறது வீதி. கதவுஜன்னல் சாத்திய வீடு படுத்துக்கிடக்கும் தெருநாய் நகராது நிற்கும் வாகனம் என அசைவற்றது எதைக்கண்டாலும் கூடிவிடுகிறது விசனம். கிளைகள் அசையக் குலுங்குகிறது பட்டுபோய்விட்ட மரம். ஏதொயிரு கிளைகள் நடுவே குடியிருந்ததற்கு சாட்சியாய் கட்டிய கூட்டை விட்டுப்போன பறவை…
போர்வைக்குள்
மேற்புறத்து மேடுபள்ளங்களைக் கொண்டு யூகிக்கமுடியவில்லை. கட்டில்மீது குவிந்துகிடக்கும் போர்வைக்குள் பதுங்கியிருக்கிறது ஏதோ ஒரு ஜந்து. விளிம்புதாண்டியும் நீண்டிருக்கின்றன கால்கள். நகங்களில்லை. போர்வையின் நுனிபற்றி உயர்த்திப் பிடிக்கிறேன். கால்களை உள்ளிழுத்துக்கொள்கிறது. கரம் நுழைத்துத் துழாவியும் அகப்படவில்லை.கடிக்கவுமில்லை. இன்னமும் உயர்த்துகிறேன். உள்ளோடி ஒளிந்துகொள்கிறது. சரிதான்.வெளிச்சம்கண்டு பயப்படுகிறது போலும். விளக்கை அணைத்தால் வெளிவரக்கூடும். சுவிட்சைத்…