ஒரு சமுதாயம் குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில் எதிர்க்கொண்ட நிகழ்வுகளின் விவரிப்பாகத்தான் பெரும்பான்மையான மலேசியத் தமிழ் நாவல்கள் எழுதப்படுகின்றன. சுதந்திரத்திற்குப்பின், வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு வெளிகளில் வெவ்வேறு சமூக அடுக்குகளில் உள்ள இந்தியர்களால் எதிர்கொள்ளப்பட்ட உயிர் உருக்கும் சம்பவங்களை ஒரு புறநகரின் பின்னணியில் தொகுத்து கிட்டத்தட்ட 50 கால அவல நிலையை மிகத்துல்லியமாய் காட்சிப்படுத்திச் செல்வதே மிச்சமிருப்பவர்கள்…