
மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதனின் விலங்கியல் இயல்புகளைச் செல்லப்பிராணிகளைக் கொண்டு விவரிக்க இயலும் முயற்சிதான் ‘போண்டு’ சிறுகதை தொகுப்பு. பெருமாள் முருகனின் ‘வேல்’ எனும் சிறுகதை தொகுப்பைத் தொடர்ந்து, ‘போண்டு’ பதினொன்று சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக வெளியாகி உள்ளது. வளர்ப்பு பிராணிகளை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டிருந்தாலும் அதை வளர்க்கும் மனித விலங்கினைப் பற்றிய கதைகளாகவே என்னால் இக்கதைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. மனிதன் என்பவன்…
