
பயணங்கள் மிகச் சுவாரசியமானவை. அவ்வப்போது நம்மை எதார்த்தத்திலிருந்து தப்பிக்கச் செய்து, நமக்கே நம்மை யாரென்று அடையாளங்காட்டி மீட்டெடுப்பன. இந்தச் சுழற்சி இப்படியே தொடர்ந்துகொண்டிருப்பதால்தான் மனிதனால் தன்னியல்பில் செயல்பட முடிகின்றது. பயணங்கள் நின்று போனால், மனம் இறுக்கமுறும். அதன் நீட்சியாகச் செயல்பாடுகளில் சிக்கல் நேரும். உளவியல் சார்ந்த எதிர்பாரா சம்பவங்கள் நிகழும். இவையெல்லாம் நாம் கடந்த ஓராண்டு…