
வைகாசி பாட்டி என்னமோ சாதிப் பார்ப்பவள்தான். ஆயினும் எல்லோரிடமும் சகசமாய் பழகும் குணம் அவளுக்கு இருந்தது. யார் வீட்டுக்குப் போனாலும் சாப்பிடவோ குடிக்கவோ அவளுக்கு மனத்தடை இருந்ததில்லை. அவளைப் பொருத்தவரை திருமணத்திற்கு மட்டும்தான் சாதிப் பார்க்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடிருந்தாள். தான் என்ன சாதி என்று தெரிந்த அவளுக்கு ‘சாதி’ என்றால் என்னவென்று தெரியாது.…