Author: கு.அன்புக்கரசி

வைகாசி

வைகாசி பாட்டி என்னமோ  சாதிப் பார்ப்பவள்தான். ஆயினும் எல்லோரிடமும் சகசமாய் பழகும் குணம் அவளுக்கு இருந்தது. யார் வீட்டுக்குப்  போனாலும் சாப்பிடவோ குடிக்கவோ அவளுக்கு மனத்தடை இருந்ததில்லை. அவளைப் பொருத்தவரை திருமணத்திற்கு மட்டும்தான்  சாதிப் பார்க்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடிருந்தாள். தான் என்ன சாதி என்று தெரிந்த அவளுக்கு  ‘சாதி’ என்றால் என்னவென்று தெரியாது.…

புரியவில்லை என்பதுதான் புரிந்தது

மகிழுந்தில் அமர்ந்தவாறு பள்ளி மாணவர்கள் நுழைவாயிலில் நுழைவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தினமும் பார்ப்பதுதான். எப்போதும் பள்ளிக்கு வருகின்ற மாணவர்களின் பெற்றோர்கள் தன் பிள்ளைகளை வகுப்பறை வாசல் வரை கொண்டு வந்து விட்டுச் செல்பவர்களும் உண்டு. பள்ளிக்குத் தனித்து வருகின்ற மாணவர்களும் உண்டு. தன் தோழன் அவன் தாய் தந்தையோடு வருவதைப் பார்க்கும்போது அவன் பார்வையில் ஓர் ஏக்கம்…