Author: ஆதித்தன் மகாமுனி

‘வல்லினம்’ நாவல் முகாமின் இரண்டாவது நாள்

பிப்ரவரி 26-27 என இரு நாள்கள் நடந்த வல்லினம் நாவல் முகாமில் நானும் கலந்து கொண்டேன். நாவல் முகாம் குறித்த இரண்டாவது நாள் அனுபவங்களைப் பதிவு செய்யும்படி வல்லினம் குழுவினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தப் பதிவினை எழுதுகிறேன். பிப்ரவரி 27, காலை சிற்றூண்டிக்குப் பின் சரியாக 8.00 மணிக்கு முகாம் தொடக்கம் கண்டது. புதிய படைப்பாளர்கள் படைப்புலகத்தில்…

புனைவுகளில் புரண்டோடும் திருப்பங்கள்

சிறுகதை என்பது புத்திலக்கியத்தின் வடிவம். மரபிலக்கியம் சமூகத்தில் உள்ள நம்பிக்கைகளையும், விழுமியங்களையும் பற்றியே வலியுறுத்திக் கூறும். புத்திலக்கியவாதிகள் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை என்பது பலவிதமான முரண்பாடுகளால் ஆனது என்று எண்ணியமையால் வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகளைச் சிறுகதையின் மூலமாகச் சொல்வர். புத்திலக்கியத்தின் சிறுகதை ஒரு தருணத்தையே கதையாக மாற்றும் வடிவம். கதை நிகழும் சூழலிலிருந்தே கற்பனையை வளர்த்துக் கொண்டு…

‘ரிங்கிட்’ – மதிப்பு வீழாத நாணயம்

மரணத் தருவாயில் இருக்கும் ஒருவருடைய மரணம் நிகழ போவது அவருக்கு மட்டுமே தெரியும். அது எப்படி இருக்கும் என்பது யாராலும் சொல்ல முடியாது. வேண்டுமென்றால் செத்து மீண்டும் பிழைத்து வந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அப்படியொரு நிகழ்வு நடக்கப்போவது இல்லை. பிறகு எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? ஒரு நல்ல எழுத்தாளனால் மட்டுமே சொல்ல…

மலைக்காடு: மலைமேட்டு முனியின் கனவுகாடு

இரு நூற்றாண்டுகளுக்கு முன், ஒரு  குமுகாயத்தின் அடிப்படைத் தேவைகளை எல்லாம் பறித்துக் கொண்டு கொத்தடிமைகளாய், வாய்ப்பொத்திக் கைக்கட்டி ஏவிய வேலைகளைச் செய்ய உலகம் முழுதும் தேடித் திரிந்து வெள்ளையர்கள் அள்ளிக் கொண்டு வந்த பேரினம்தான் தென்னிந்தியத் தமிழர்கள். கப்பல்களில் அடித்தட்டு மக்கள் பயணிக்கக் கூடிய அந்தப் பகுதியில், மனித மலமும் மூத்திரமும் ஒருங்கே காய்ந்து நாறும்…