நடந்தேறுகிறது எதிர்பாராத இவையெல்லாம் ஒரு கோடு கடல் ஆகுமென நினைத்திருக்கவில்லை ஓர் இசை வாழ்க்கை ஆகுமென நினைத்திருக்கவில்லை ஒரு குண்டூசி இரவு ஆகுமென என்று கூட நினைத்திருக்கவில்லை இன்னும் எத்தனையோ நினைத்திருக்கவில்லைகள் இவையெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை குண்டூசி துளையிடும் இசை நீள்கிறது காகிதத்தில் நீளும் பெருங்கோடென பழமொழிகளுக்கு எதிராக மொழியை கோர்க்காதவர்கள் தோன்றிக்கொண்டே செல்கின்றனர் வீட்டின் கூரைகளை தாண்டிப்…