ஓர் உணவகத்துக்கு வெளியே இப்படி ஓர் அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட்டிருந்தது, “நீங்கள் இங்கு கட்டணமின்றி உண்ணலாம். நீங்கள் சாப்பிட்டதற்கான பணம் உங்கள் பேரக் குழந்தைகளிடமிருந்து பிறகு பெற்றுக் கொள்ளப்படும்”. இதனைக் கண்ட ஒருவர் உணவகத்துக்குள் நுழைந்து வயிறு புடைக்க உண்டார். நடக்க முடியாமல் நடந்து வெளியே போக எத்தனித்தார். “ஐயா பணம் செலுத்திவிட்டுப் போங்கள்” என்றார்…